பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 வெ. பிராம்மணனும் சூத்திரனும் լոուՔ.2 னம் வைக்கப்பட்டிருக்கிற தென்பது நீர் அறியீர் போலும்! தெரியுமெனக்கு-ஆயினும் நான் என்ன செய்வது ? எங்கள் முதலியார் வகுப்பில் கான்கைந்து குடும்பங் கள்தானிருக்கின்றன-நான் சம்பந்தம் செய்யக்கூடிய தாக. அவைகளில்-இந்தப் பிள்ளை தான் -கூரையின் மீது கொள்ளிக் கட்டையைச் சு ற் ற ம் குமாானைப் போல்-மற்றவர்களை விட கொஞ்சம் யோக்கியணுயிருக் கிருன். முதலியார் அவாள், உங்கள் குடும்ப விஷயத்தில் நான் ஏதோ தலையிட்டுக் கொள்ளுகிறேன் என்று எண்ண வேண்டாம். இதென்ன ஜாதிக்குள் ஜாதி, பிரிவுக்குள் பிரிவா ? நம்முடைய தேசத்தில், இக்துக்கள், மஹம்மதி யர் என்கிற பிரிவேபோதும், நாம் ஒன்ருய் ஐக்கியமாகாத படி நம்மைப் பாழாக்க இந்த இந்துக்களுக்குள் நான்கு பெரும் பிரிவு, அந்த ஒவ்வொன்று ஜாதியிலும் கணக் கில்லாத கிளை ஜாதிகள் சூத்திரர்களில் மாத்திாம் நமது தேசத்தில் எத்தனே பிரிவினர் இருக்கின்றனர் என்று சொல்லமுடியுமா? அவர்களில் ஒரு கூருகிய முதலிமார் களில் எத்தனே கிளைகள் ? கார்கார்த்தார், கொண்டை கட்டிகள், துளவ வேளாளர், இன்னும் எத்தனையோ ? இந்தத் துளவ வேளாளர்களில், பூந்தமல்லியார், பொன் னேரியார், காஞ்சிபுரத்தார், ஆற்காட்டார்-இன்னும் ஒவ்வொரு ஊருக்கு ஒரு பிரிவுதான்! இப்படி பிரிந்துக் கொண்டுபோயிருந்தால் இதன் முடிவுதான் என்ன ? வரவர ஐக்கியமாவதைவிட்டு வாவாப் பிரிவுகள் அதிமா கின்றன வேறு விதத்தில் இதைப்பற்றி யோசிப்போம். இப்படி நாம் உள்ளுக்குள்ளேயே கலியாணம் செய்துக் கொள்ளப் பார்ப்பதினுல்தான், பெண்களுக்குத் தக்க பிள்ளைகள் கிடைப்பதில்லை, பிள்ளைகளுக்குத் தக்க பெண் கள் அகப்படுவதில்லை! அன்றியும் தமது மாபுகளெல்லாம் தக்க சந்ததியின்றி அழிந்துபோகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/92&oldid=725832" இலிருந்து மீள்விக்கப்பட்டது