பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

욕나, 욕. என்ன நேர்ந்திடினும் @ ஹா ஜூர், தாங்கள் ஹிந்து பக்கிரிகள் என்று சொல்லு கிருர்கள் கூடாரத்துக் கருகில்வராத படி அவர்களைத் தடுக்க காங்கள் முயன்றும், அவர்கள் பாதுவடிாவைப் பார்க்கவேண்டுமென்று கட்டாயப்படுத்திஞர்கள்; பக்கிரி களைத் தடுக்கக் கூடாதென்று சர்க்கார் உத்திரவாயிருக் கிறபடியால், நாங்கள் இன்னது செய்வதென்று தெரியா திருக்க, அவர்கள் இங்குவந்து விட்டார்கள். அவர்களை இங்கு அழைத்துக்கொண்டுவா. (சிப்பாய் போகிமு ன்) குரலேக் கவனித்தால் அவர்கள் பக்கிரிகளாகத்தோன்ற வில்லை. பாதுஷாவின் சமீபத்தில் அதிக நெருக்கமாக நாம் அறியாத பேர்களை அனுகவிடுவது அவ்வளவு யுக்தமல்ல. நம்பிக்கை நம்பிக்கையை உண்டுபண்ணுகிறது; சந்தேகம் சந்தேகத்தை விளைவிக்கிறது. சிப்பாய் வீராபாயையும் பத்மினிடாயையும் அழைத்துக் கொண்டுவருகிருன். எவன் மகம்மதியர்களுக்கும் ஹிந்துக்களுக்கும் ஈஸ்வர ஞயிருக்கிருனே, அப்படிப் பட்டவன் மொகலாய் பாதுஷா அவர்களுக்கு ஆயுசையும் ஐஸ்வர்யத்தையும் கொடுக்கவேனும் ! நீங்களும் கொடுக்கலாமே, நீங்கள் பக்கிரிகளான படி யால், நாங்கள் வேலையாட்கள்-வேலை செய்யும் கருவிகள். (அல்பஜலிடம்) இவர்களுடைய குரல் மிகவும் இனிமை யாயிருக்கிறது. (வீாாபாயும் பத்மினிபாபும் ஒருவரை யொருவர் உற்றுநோக்குகின்றனர்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/47&oldid=725880" இலிருந்து மீள்விக்கப்பட்டது