பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைச்சுவர் இருபுறமும் ஒரு இரட்டைக்காட்சி நாடகம்.

  • 。試イi/Lベiペぶ。ー〜

காலம்:-சாயங்காலம். இடம்:-சென்னபட்டணத்திற்கு அருகாமையிலுள்ள ஒரு பேட்டையின் முக்கிய வீதியில் செங்கற் சுவரினும் பிரிக்கப்பட்ட, பக்கத்தில் பக்கத்திலிருக்கும்படியான, இரண்டு வீடுகளின் பாகங்கள். (ரங்கமானது இரண்டு பாதியாக ஒர் செங்கற் சுவரினல் பிரிக்கப் பட்டிருக்கிறது. நாடகத்தைப் பார்ப்பவர்களுக்கு இச்சுவரின் உயரமும் அகலமும் தான் தெரியும், இவ்விரண்டு வீடுகளின் முன்பக்கத்து சுவர்களை எடுத்து விட்டதுபோற் காணும். இடது பக்கத்து வீட்டில் ஒரு விருந்துக்காக அலங்காரம் செய்யப்பட்ட நாற்காலி மேஜைகள் முதலியன வெல்லாம் ஒழுங்காய் வைக்கப் பட்ட ஒரு கூடம் தெரிகிறது. இந்த நாடகத்தில் இந்தப்பக்கம் நடக்கும் காரியங்களெல்லாம் "இடது புறம்” என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது. வலது பக்கத்து வீட்டின் அறையில் ஒரு கயிற்றினம் பின்னிய கட்டிலின் மீது ஒரு நோயாளி, நடராஜ சாஸ்திரி, படுத்துக் கொண்டிருக்கிருன், அவன் பக்கத்தில் ஒரு முக்காலியின் மீது ஒரு செம்பும் சில மருந்து புட்டிகளும் வைக்கப் பட்டிருக்கின்றன. இங்கு நடக்கும் காரியங்களெல்லாம் "வலது புறம்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.) (இடது புறம்.) வீராசாமி சா கான்களே யெல்லாம் சரியாக வைத்துக்கொண்டும் அவைகளின் மீதிருக்கும் தூசியைத்தட்டிக் கொண்டு மிருக்கிருன்; அம்மாயி சற்று தாரத்தில் சிற்கிருள். அவள் பக்கத்தில் ஒரு துடப்பம் கிடக்கிறது. இந்த மாதிரி நேரிடுமென்று யார் கினத்திருக்கக் கூடும் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/7&oldid=725894" இலிருந்து மீள்விக்கப்பட்டது