பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

219


(ix)காடுகள் (ஒதுக்குறுத்தப்பட்ட காடுகள் அல்லாதவை);
(x)கைத்தறி மற்றும் நெசவங்கள்;
(xi)நலவாழ்வு மற்றும் குடும்ப நல்வாழ்வு;
(xii)ஏழாம் இணைப்புப்பட்டியலின் I ஆம் பட்டியலின் 84 ஆம் பதிவின் வகையங்களுக்கு உட்பட்டு வெறியூட்டும் மதுக்குடிவகைகள், அபின் மற்றும் அதன் வழிப் பொருள்கள்;
(xiii)பாசனம்;
(xiv)தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு;
(xv)நிலம் மற்றும் வருவாய்;
(xvi) நூலகப் பணிகள் (மாநில அரசாங்கத்தினால் நிதியுதவியளிக்கப்பட்டு கட்டாள்கை செய்யப்படுபவை);
(xvii)பரிசுச் சீட்டுகள் (ஏழாம் இணைப்புப்பட்டியலின் 1 ஆம் பட்டியலின் 40 ஆம் பதிவின் வகையங்களுக்கு உட்பட்டவை); காட்சி அரங்குகளும், நாடக நிகழ்ச்சிகளும், மற்றும் திரைப்படங்கள் (ஏழாம் இணைப்புப்பட்டியலின் 1 ஆம் பட்டியலின் 60 ஆம் பதிவின் வகையங்களுக்கு உட்பட்டவை;)
(xviii) அங்காடிகளும், பொருட்காட்சிகளும்;
(xix)மாநகராட்சி, மேம்பாட்டுப் பொறுப்பமைவுகள், மாவட்டக் கழகங்கள் மற்றும் பிற உள்ளாட்சி அதிகாரஅமைப்புகள்;
(xx)அருங்காட்சியகம் மற்றும் மாநிலத்தினால் கட்டாள்கை செய்யப்படும் அல்லது நிதியுதவியளிக்கப்படும், தொல்பொருளாய்வு அமைவனங்கள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவையென நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தாலோ அதன் வழியாலோ விளம்பப்படுபவை அல்லாத பிற தொன்மையும் வரலாற்றுச் சிறப்பும் வாய்ந்த நினைவுச் சின்னங்களும் பதிவணங்களும்;
(xxi)ஊராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி;
(xxii)திட்டமிடுதல் மற்றும் வளர்ச்சி;
(xxiii)அச்சகம் மற்றும் எழுதுபொருள்;
(xxiv)மக்கள் நலவாழ்வு பொறியியல்;
(xxv)பொதுப் பணித் துறை;
(xxvi)விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்பு;
(xxvii)பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவு செய்தல்;
(xxviii)தீருதவி மற்றும் மறுவாழ்வளிப்பு;
(xxix)பட்டுப்புழு வளர்ப்பு;
(xxx)ஏழாம் இணைப்புப்பட்டியலின் 1 ஆம் பட்டியலின் 7 ஆம் மற்றும் 52 ஆம் பதிவுகளின் வகையங்களுக்கு உட்பட்ட சிறு, குடிசை மற்றும் ஊரகத் தொழில்;
(xxxi) சமூக நலன்;
(xxxii)மண்வளப் பாதுகாப்பு;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/245&oldid=1467239" இலிருந்து மீள்விக்கப்பட்டது