பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220


(xxxiii)விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலன்;
(xxxiv) புள்ளிவிவரங்கள்;
(xxxv) சுற்றுலா;
(xxxvi)கொண்டு செல்லுதல், ஏழாம் இணைப்புப் பட்டியலின் 1 ஆம் பட்டியலில் குறித்துரைக்கப்பட்டிராத சாலைகள், பாலங்கள், தோணித்துறைகள் மற்றும் பிற செய்தி தொடர்பு சாதனங்கள் நகராட்சிக் காந்தவண்டிப் பாதைகள், கம்பிவடப்பாதைகள், உள்நாட்டு நீர்வழிகள் மற்றும் அத்தகைய நீர்வழிகள், எந்திரத்தால் உந்தப்படும் ஊர்திகள் அல்லாத பிற ஊர்திகள் குறித்து ஏழாம் இணைப்புப்பட்டியலின் 1 ஆம் பட்டியல் மற்றும் IIIஆம் பட்டியலின் வகையத்திற்கு உட்பட்டு அதன்மீதான போக்குவரத்து);
(xxxvii)மாநில அரசாங்கத்தினால் கட்டாள்கை செய்யப்படுவதும் நிதியுதவியளிக்கப் படுவதுமான பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனம்;
(xxxviii)நகர்ப்புற வளர்ச்சி, நகர மற்றும் ஊர் அமைப்பு;
(xxxix)ஏழாம் இைைணப்புப்பட்டியலின் 1 ஆம் பட்டியலின் 50 ஆம் பதிவின் வகையங்களுக்கு உட்பட்ட எடைகள் மற்றும் அளவுகள்; மற்றும்
(xl)சமவெளிப் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நல்வாழ்வு:

வரம்புரையாக: 'அத்தகைய சட்டங்களிலுள்ள எதுவும்,—

(அ) இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியில் குடிமகன் ஒருவரின், அவரது நிலம் பொறுத்து, நிலவுறும் உரிமைகளையும், மதிப்புரிமைகளையும் ஒழித்துவிடுதலோ மாற்றிவிடுதலோ ஆகாது; மற்றும்
(ஆ) மரபு வழியுரிமை, ஒதுக்கீடு, அறுதிசெய்தல் வாயிலாவோ அல்லது வேறு ஏதேனும் உரிமை மாற்றம் வாயிலாகவோ குடிமகன் ஒருவரை, அந்தக் குடிமகன், போடோலாந்து ஆட்சி நிலவரை வரையிடங்கள் மாவட்டத்திற்குள், அத்தகைய நிலக்கையகப்படுத்துதலுக்குப் பிறவாறாக தகுமையுடையவராயின், நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு குடிமகன் எவருக்கும் அனுமதியளிக்க மறுக்காது.

(2) 3ஆம் பத்தியின்படியோ, இந்த பத்தியின்படியோ இயற்றப்படும் அனைத்து சட்டங்களும், அவை ஏழாம் இணைப்புப்பட்டியலின் III ஆம் பட்டியலில் குறித்துரைக்கப்பட்ட பொருட்பாடுகளுக்குத் தொடர்புடையதாக இருக்கும் வரை, உடனடியாக, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும், அவர் அதனை குடியரசுத்தலைவரின் ஓர்வுக்காக ஒதுக்கி வைப்பார்.

(3) சட்டம் ஒன்று, குடியரசுத்தலைவரின் ஓர்வுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதன் பேரில் குடியரசுத்தலைவர், தாம் மேற்சொன்ன சட்டத்துக்கு ஏற்பிசைவு அளிப்பதாகவோ அதற்கு ஏற்பிசைவு அளிக்க மறுப்பதாகவோ விளம்புவார்:

வரம்புரையாக: அச்சட்டத்தையோ அதனின் குறித்துரைக்கப்பட்ட வகையங்களில் எவற்றையுமோ, போடோலாந்து ஆட்சிநிலவரை மன்றம் மறுஓர்வு செய்யுமாறும், குறிப்பாக தாம் பரிந்துரைக்கும் திருத்தங்கள் எவற்றையும் அறிமுகப்படுத்துவது விரும்பத்தகுந்ததா என்பதைக் குறித்து ஓர்வு செய்யுமாறும் கேட்டுக்கொள்கின்ற செய்தியுரையுடன், அச்சட்டத்தை, அந்த மன்றத்துக்குத் திருப்பியனுப்பிவைக்குமாறு குடியரசுத்தலைவர் ஆளுநரைப் பணிக்கலாம்; அவ்வாறு ஒரு சட்டம் திருப்பியனுப்பப்பட்டிருக்கும்போது, மேற்சொன்ன மன்றம், அதன்படியே, அந்தச் செய்தியுரை கிடைக்கப் பெற்ற தேதியிலிருந்து ஆறு மாத காலஅளவுக்குள் ஓர்வு செய்தல் வேண்டும், மேலும், மேற்சொன்ன மன்றத்தில் அச்சட்டம், திருத்தத்துடனோ திருத்தமின்றியோ மீண்டும் நிறைவேற்றப்படுமாயின் மீண்டும் குடியரசுத்தலைவரிடம் அவரது ஏற்பிசைவுக்காக முன்னிடப்படுதல் வேண்டும்.]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/246&oldid=1467242" இலிருந்து மீள்விக்கப்பட்டது