பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222


(5) குடியரசுத்தலைவர், தொடர்புடைய மாநில அரசாங்கத்தினைக் கலந்தாய்வு செய்தபின்பு, அறிவிக்கையின் வாயிலாக இதற்கெனக் குறித்திடும் தேதியன்றும் அது முதற்கொண்டும், இந்தப் பத்தி, அந்த அறிவிக்கையில் குறித்துரைக்கப்படும் தன்னாட்சி மாவட்டம் அல்லது வட்டாரம் தொடர்பாக

(i). (1) ஆம் உள்பத்தியில் “அத்தகைய வரையிடங்களிலுள்ள பட்டியலில் கண்ட பழங்குடியினர் மட்டுமே தரப்பினர்களாகவுள்ள, இந்த இணைப்புப்பட்டியலின் 5ஆம் பத்தியின் (1)ஆம் உள்பத்தியின் வகையங்கள் பொருந்துறும் உரிமை வழக்குகளும் பிற வழக்குகளும் அல்லாத பிற” என்னும் சொற்களுக்கு மாற்றாக, "ஆளுநர் இதற்கெனக் குறித்துரைக்கும் இந்த இணைப்புப்பட்டியலின் 5ஆம் பத்தியின் (1)ஆம் உள்பத்தியில் சுட்டப்பட்டுள்ளவை போல்வதான தன்மையுடைய உரிமைவழக்குகளும் பிற வழக்குகளும் அல்லாத” என்னும் சொற்கள் அமைக்கப்பட்டிருந்தாற் போன்றும்,

(ii). (2), (3) ஆகிய உள்பத்திகள் விட்டுவிடப்பட்டிருந்தாற்போன்றும்,

(iii). (4)ஆம் உள்பத்தியில்—

(அ) "ஒரு வட்டார மன்றம் அல்லது, நேர்வுக்கேற்ப, மாவட்ட மன்றம் ஆளுநரின் முன் ஒப்பேற்புடன் பின்வருவனவற்றை ஒழுங்குறுத்துவதற்கான விதிகளைச் செய்யலாம்" என்னும் சொற்களுக்கு மாற்றாக, ஆளுநர் பின்வருவனவற்றை ஒழுங்குறுத்துவதற்கான விதிகளைச் செய்யலாம்" என்னும் சொற்கள் அமைக்கப்பட்டிருந்தாற்போன்றும்,

(ஆ). (அ) கூறுக்கு மாற்றாகப் பின்வரும் கூறு, அதாவது, (அ) ஊராட்சி மன்றங்களையும் ஊர் நீதிமன்றங்களையும் அமைத்தல் இந்தப் பத்தியின்படி அவற்றால் செலுத்தப்பட வேண்டிய அதிகாரங்கள், மேலும், ஊராட்சி மன்றங்கள், ஊர் நீதிமன்றங்கள் ஆகியவற்றின் முடிபுகளிலிருந்து செய்து கொள்ளப்படும் மேன்முறையீடுகளுக்கான நீதிமன்றங்கள்” என்னும் கூறு அமைக்கப்பட்டிருந்தாற்போன்றும்.

(இ). கூறுக்கு மாற்றாகப் பின்வரும் கூறு, அதாவது, "(இ). (5)ஆம் உள்பத்தியின்படி குடியரசுத்தலைவரால் குறித்திட்ட தேதியை ஒட்டி முன்பு வட்டார அல்லது மாவட்ட மன்றத்தின் முன்பு, அல்லது அத்தகைய மன்றத்தினால் அமைக்கப்பட்ட பிற நீதிமன்றம் எதன் முன்பும் முடிவுறாநிலையிலுள்ள மேன்முறையீடுகளையும் பிற நடவடிக்கைகளையும் - மாற்றல் செய்தல்” என்னும் கூறு அமைக்கப்பட்டிருந்தாற்போன்றும், மற்றும்

(ஈ). (உ) கூறில், "(1), (2) ஆகிய உள்பத்திகளின்” என்னும் சொற்களுக்கும் அடைப்புக்குறிகளுக்கும் இலக்கங்களுக்கும் மாற்றாக, "(1) ஆம் உள்பத்தியின்” என்னும் சொற்களும் அடைப்புக்குறிகளும் இலக்கமும் அமைக்கப்பட்டிருந்தாற்போன்றும்

செல்திறம் பெறும்.

[1][(6) இந்தப் பத்தியிலுள்ள எதுவும், இந்த இணைப்புப்பட்டியலின் 2 ஆம் பத்தியின் (3)ஆம் உள்பத்தியின் வரம்புரையின்படி அமைக்கப்பட்ட போடோலாந்து வரையிட மன்றத்திற்குப் பொருந்தாது.]


  1. 2003 ஆம் ஆண்டு அரசமைப்பின் ஆறாம் இணைப்புப்பட்டியலுக்கான (திருத்தம்) சட்டத்தால் (44/2003) புகுத்தப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/248&oldid=1467244" இலிருந்து மீள்விக்கப்பட்டது