பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230


(3) ஆளுநர், தம் அமைச்சர்களுக்கிடையே மாநில அரசாங்கத்தின் அலுவல்களைப் பகிர்ந்தொதுக்குகையில், தம்முடைய அமைச்சர்களில் ஒருவரை, அந்த மாநிலத்தில் உள்ள தன்னாட்சி மாவட்டங்கள், தன்னாட்சி வட்டாரங்கள் ஆகியவற்றின் நலப்பாட்டிற்கு, தனியுறு பொறுப்பு வகிப்பவராக அமர்த்தலாம்.

[1]15. மாவட்ட மற்றும் வட்டார மன்றங்களின் செயல்களையும் தீர்மானங்களையும் அழித்தல் செய்தல் அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் :

(1) ஆளுநர், எச்சமயத்திலேனும், ஒரு மாவட்ட அல்லது ஒரு வட்டார மன்றத்தின் ஒரு செயலோ தீர்மானமோ இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிக்கக்கூடும் என்றோ பொது ஒழுங்கமைதிக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடியது என்றோ தெளிவுறக்காண்பாராயின், அத்தகைய செயலை அல்லது தீர்மானத்தை அவர் அழித்தறவு செய்யலாம் அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்; மேலும், அத்தகைய செயல் செய்யப்படுவதையோ தொடர்ந்து செய்யப்படுவதையோ அத்தகைய தீர்மானத்தைச் செல்திறப்படுத்துவதையோ தடையுறுத்துவதற்கு (மன்றம் தற்காலிகமாக நிறுத்திவைப்பதும், அந்த மன்றத்திடம் உற்றமைந்திருக்கும் அல்லது அதனால் செலுத்தப்படுவதாகும் அதிகாரங்கள் அனைத்தையும் அல்லது அவற்றில் எதனையும் தாமே மேற்கொள்ளுவதும் உள்ளடங்கலாக) தாம் தேவையெனக் கருதுகிற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

(2) இந்தப் பத்தியின் (1)ஆம் உள்பத்தியின்படி ஆளுநரால் இடப்பட்ட ஆணை எதுவும், அதற்கான காரணங்களுடன், இயன்ற அளவு விரைவில், மாநிலச் சட்டமன்றத்தின் முன்பு வைக்கப்படுதல் வேண்டும்; மேலும், அந்த ஆணை, அவரால் பின்னறவு செய்யப்பட்டாலன்றி, அந்த ஆணை அவ்வாறு இடப்பட்ட தேதியிலிருந்து பன்னிரண்டு மாதக் காலஅளவுக்குத் தொடர்ந்து செல்லாற்றலில் இருந்து வரும்:

வரம்புரையாக: அத்தகைய ஆணை தொடர்ந்து செல்லாற்றலில் இருப்பதற்கு ஒப்பேற்பளிக்கும் ஒரு தீர்மானம், மாநிலச் சட்டமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டாலும் நிறைவேற்றப்படுந்தோறும், அந்த ஆணை ஆளுநரால் நீக்கறவு செய்யப்பட்டாலன்றி, இந்தப் பத்தியின்படி அது பிறவாறு செயற்படுவது அற்றுபோயிருந்திருக்கும் தேதியிலிருந்து மேலும் பன்னிரெண்டு மாதக் காலஅளவுக்குத் தொடர்ந்து செல்லாற்றலில் இருந்து வரும்.

[2]16. ஒரு மாவட்ட அல்லது வட்டார மன்றத்தைக் கலைத்தல் : (1) இந்த இணைப்புப்பட்டியலின் 14ஆம் பத்தியின்படி அமர்த்தப்பட்ட ஓர் ஆணையத்தின் பரிந்துரையின்மீது, ஆளுநர், பொது அறிவிக்கை வாயிலாக, ஒரு மாவட்ட அல்லது வட்டார மன்றத்தைக் கலைப்பதற்கு ஆணையிடலாம்; மேலும்—

(அ)மன்றத்தின் மறுஅமைப்புக்காகப் புதியதொரு பொதுத் தேர்தல் உடனடியாக நடத்தப்படுதல் வேண்டும் என்று பணிக்கலாம்; அல்லது
(ஆ)மாநிலச் சட்டமன்றத்தின் முன்ஒப்பேற்புக்கு உட்பட்டு, அந்த மன்றத்தின் அதிகாரத்தின்கீழுள்ள வரையிடத்தின் நிருவாகத்தைத் தாமே மேற்கொள்ளலாம் அல்லது பன்னிரண்டு மாதங்களுக்கு மேற்படாத ஒரு காலஅளவுக்கு, அத்தகைய வரையிடத்தின் நிருவாகத்தை, மேற்சொன்ன பத்தியின்கீழ் அமர்த்தப்பட்டுள்ள ஆணையத்தின்கீழோ தம்மால் தக்கதெனக் கருதப்படும் பிற குழுமம் எதன்கீழுமோ விட்டுவைக்கலாம்:


  1. திரிபுரா, மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு ஆறாம் இணைப்புப்பட்டியல் பொருந்துறுமாறு, 15 ஆம் பத்தியானது, 1988 ஆம் ஆண்டு அரசமைப்பு (திருத்தம்) சட்டத்தின் (67/1988) 2ஆம் பிரிவினால் பின்வருமாறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது:-
    (அ) தொடக்கப் பத்தியில் “மாநிலச் சட்டமன்றத்தால்” என்ற சொற்களுக்கு மாற்றாக “அவரால்" என்ற சொற்கள் அமைக்கப்படும்;
    (ஆ) வரம்புரை விட்டுவிடப்படும்;

  2. திரிபுரா, மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு ஆறாம் இணைப்புப்பட்டியல் பொருந்துறுமாறு, 16 ஆம் பத்தியானது, 1988 ஆம் ஆண்டு அரசமைப்பு (திருத்தம்) சட்டத்தின் (67/1988) 2ஆம் பிரிவின்படி பின்வருமாறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது:-
    (அ) (1)ஆம் உள்பத்தியின் (ஆ) கூறில் “மாநிலச் சட்டமன்றத்தின் முன் ஒப்பேற்புக்கு உட்பட்டு" என்ற சொற்களும், இரண்டாம் வரம்புரையும் விட்டுவிடப்படும்;
    (ஆ) (3)ஆம் உள்பத்திக்கு மாற்றாக, பின்வரும் உள்பத்தி அமைக்கப்படும்:-
    “(3) இந்தப் பத்தியின் (1)ஆம் உள்பத்தியின்படி அல்லது (2)ஆம் உள்பத்தியின்படி பிறப்பிக்கப்பட்ட ஆணை ஒவ்வொன்றும், அதற்கான காரணங்களுடன் மாநிலச் சட்டமன்றத்தின் முன்பு வைக்கப்படுதல் வேண்டும்”.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/256&oldid=1466516" இலிருந்து மீள்விக்கப்பட்டது