பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236


(4) மிசோரம் ஒன்றியத்து ஆட்சிநிலவரையின் ஆளுகையர், பின்வரும் பொருட்பாடுகள் அனைத்திற்குமோ அவற்றில் எதற்குமோ ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆணைகளின் வழிவகைசெய்யலாம்:—

(அ)நிலவுறும் வட்டார மன்றத்தின் (அதனால் செய்யப்பட்ட ஒப்பந்தம் எதன்படியுமான உரிமைகளும் கடப்பாடுகளும் உள்ளடங்கலாக) சொத்திருப்புகளையும் உரிமைகளையும் கடப்பாடுகளையும் முழுவதுமாகவோ பகுதியாகவோ, நேரிணையான புதிய மாவட்ட மன்றத்திற்கு மாற்றல் செய்தல்;
(ஆ)நிலவுறும் வட்டார மன்றம் ஒரு தரப்பினராக உள்ள சட்ட நடவடிக்கையில், நிலவுறும் வட்டார மன்றத்திற்கு மாற்றாக நேரிணையான புதிய மாவட்ட மன்றத்தை ஒரு தரப்பினராக அமைத்தல்;
(இ)நிலவுறும் வட்டார மன்றத்தில் பணிபுரிபவர்கள் எவரும், நேரிணையான புதிய மாவட்ட மன்றத்திற்கு மாற்றல் செய்யப்படுதல் அல்லது அதனால் மீண்டும் வேலைக்கமர்த்தப்படுதல்; அவ்வாறு மாற்றல் செய்ததன் அல்லது மீண்டும் வேலைக்கமர்த்தப்பட்டதன் பின்பு அத்தகைய பணிபுரிபவர்களுக்குப் பொருந்துறுவதாகும் பணிவரையுரைகள் மற்றும் பணிவரைக்கட்டுகள்;
(ஈ)நிலவுறும் வட்டார மன்றத்தினால் இயற்றப்பட்டு குறித்திடப்பட்ட தேதியை ஒட்டி முன்பு செல்லாற்றலில் இருந்த சட்டங்கள்; அத்தகைய சட்டங்கள் தகுதிறம்வாய்ந்த சட்டமன்றத்தினால் அல்லது தகுதிறம்வாய்ந்த பிற அதிகாரஅமைப்பினால் மாற்றமோ நீக்கறவோ திருத்தமோ செய்யப்படும் வரையில், நீக்கறவு அல்லது திருத்தம் செய்தல் வாயிலாக இதற்கென ஆளுகையர் செய்யும் தழுவமைவுகளுக்கும் மாற்றமைவுகளுக்கும் உட்பட்டு, தொடர்ந்து இருந்து வருதல்;
(உ) ஆளுகையர் தேவையெனக் கருதுகிற சார்வுறு, விளைவுறு மற்றும் துணைவுறு பொருட்பாடுகள்.

[1][20ஆஅ.ஆளுநர் தனது பதவிப்பணிகளை ஆற்றுகையில் தன் உளத்தேர்வின் படியான அதிகாரங்களைச் செலுத்துதல் :

ஆளுநர் இந்த இணைப்புப்பட்டியலின் 1ஆம் பத்தியின் (2), (3) ஆகிய உள்பத்திகள் (2)ஆம் பத்தியின் (1), (6) ஆகிய உள்பத்திகள் முதல் வரம்புரை நீங்கலாக (6அ) உள்பத்தி, (7)ஆம் உள்பத்தி, 3ஆம் பத்தியின் (3)ஆம் உள்பத்தி, 4ஆம் பத்தியின் (4)ஆம் உள்பத்தி, 5ஆம் பத்தி, 6ஆம் பத்தியின் (1)ஆம் உள்பத்தி, 7ஆம் பத்தியின் (2)ஆம் உள்பத்தி, 8ஆம் பத்தியின் (4)ஆம் உள்பத்தி, 10ஆம் பத்தியின் (3)ஆம் உள்பத்தி, 14ஆம் பத்தியின் (1)ஆம் உள்பத்தி, 15ஆம் பத்தியின் (1)ஆம் உள்பத்தி, 16ஆம் பத்தியின் (1), (2) ஆகிய உள்பத்திகள் ஆகியவற்றின்படி தனது பதவிப்பணிகளை ஆற்றுகையில், அமைச்சரவையும் வடக்கு கச்சாக்குன்றுகள் தன்னாட்சி மன்றத்தையும் அல்லது நேர்வுக்கேற்ப கர்பி ஆங்குலாங்கு தன்னாட்சி மன்றத்தையும் கலந்தாய்வு செய்தபிறகு தன் உளத்தேர்வுக்கேற்ப தான் தேவையென கருதுகிற நடவடிக்கையை எடுத்தல் வேண்டும்.]


  1. 1995 ஆம் ஆண்டு அரசமைப்பின் ஆறாம் இணைப்புப் பட்டியலுக்கான (திருத்தம்) சட்டத்தினால் (42/1995) புகுத்தப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/262&oldid=1466525" இலிருந்து மீள்விக்கப்பட்டது