பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244

12. மாநிலத்தின் கட்டாள்கையிலுள்ள அல்லது மாநிலத்தின் நிதி உதவி பெறுகிற நூலகங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் இவையன்ன பிற நிறுவனங்கள்; தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை என நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தாலோ அதன் வழியாலோ விளம்பப்படுபவை நீங்கலான, தொன்மையும் வரலாற்றுச் சிறப்பும் வாய்ந்த பிற நினைவுச்சின்னங்கள்.
13. போக்குவரவு இணைவங்கள், அதாவது, சாலைகள், பாலங்கள், தோணித்துறைகள் மற்றும் I ஆம் பட்டியலில் குறித்துரைக்கப்படாத பிற போக்குவரவு இணைவங்கள்; நகராட்சிக் காந்தவண்டிப் பாதைகள் கம்பி வடப்பாதைகள்; நீர்வழிகள் குறித்து I ஆம் பட்டியலிலும் IIIஆம் பட்டியலிலும் உள்ள வகையங்களுக்கு உட்பட்டு, உள்நாட்டு நீர்வழிகளும் அவற்றின் வழியான போக்குவரத்தும்; எந்திரத்தால் உந்தப்படும் ஊர்திகள் அல்லாத பிற ஊர்திகள்.
14. வேளாண்மை, வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி, பயிர்க்கொல்லிகளுக்கு எதிரான பாதுகாப்பு, பயிர் நோய்த்தடுப்பு உள்ளடங்கலாக.
15. கால்நடைகளைப் பேணுதல், பாதுகாத்தல், மேம்படுத்துதல் மற்றும் விலங்கு நோய்த்தடுப்பு; விலங்கின மருத்துவப் பயிற்சியும் தொழிலும்.
16. பட்டித்தொழுவங்களும் கால்நடை அத்துமீறல் தடுப்பும்.
17. நீர், அதாவது, Iஆம் பட்டியலின் 56ஆம் பதிவின் வகையங்களுக்கு உட்பட்டு, நீர் வழங்குதல், பாசனம் மற்றும் கால்வாய்கள், வடிகாலும் கரையணைகளும், நீர்த்தேக்கங்களும் புனல் மின்விசையும்.
18. நிலம், அதாவது, நிலத்திலுள்ளதான அல்லது நிலத்தின்மீதான உரிமைகள், நிலக்கிழார் மற்றும் குத்தகையாளர் தொடர்பு உள்ளடங்கலாக நிலப்பிடிமான முறைகள், குத்தகைகளை ஈட்டுதல்; வேளாண் உரிமையை மாற்றுதலும் மாற்றாக்கம் செய்தலும்; நில மேம்பாடும் வேளாண் பெறுகடன்களும்; குடியமர்த்தம்.
[1][19-20. ★★]
21. மீனளங்கள்.
22. Iஆம் பட்டியலின் 34ஆம் பதிவின் வகையங்களுக்கு உட்பட்டு, காப்பாயங்கள்; வில்லங்கத்திற்குட்படுத்தப்பட்ட மற்றும் பற்றுகை செய்யப்பட்ட சொத்துக்கள்.
23. ஒன்றியத்தின் கட்டாள்கையின்கீழ் ஒழுங்குறுத்துவதையும் மேம்படுத்துவதையும் பொறுத்து I ஆம் பட்டியலிலுள்ள வகையங்களுக்கு உட்பட்டு, சுரங்கங்களையும் கனிமவள மேம்பாட்டையும் ஒழுங்குறுத்துதல்.
24. விசைத் தொழில்கள்-I ஆம் பட்டியலின் 7 மற்றும் 52 ஆகிய பதிவுகளின் வகையங்களுக்கு உட்பட்டு.
25. எரிவாயு மற்றும் எரிவாயு உற்பத்திச்சாலை.
26. IIIஆம் பட்டியலின் 33ஆம் பதிவின் வகையங்களுக்கு உட்பட்டு, மாநில எல்லைக்குள்ளான வணிகமும் வாணிபமும்.
27. IIIஆம் பட்டியலின் 33 ஆம் பதிவின் வகையங்களுக்கு உட்பட்டு, சரக்குகளை உற்பத்தி செய்தலும் வழங்குதலும் பகிர்ந்தளித்தலும்.
28. அங்காடிகளும் சந்தைகளும்.
[1][29. ★★]
30. வட்டித்தொழிலும் வட்டித்தொழில் நடத்துவோரும்; வேளாண் கடன் சுமைத் தீருதவி.


  1. 1.0 1.1 19, 20 ஆகிய பதிவுகள் 1976ஆம் ஆண்டு அரசமைப்பு (நாற்பத்திரண்டாம் திருத்தம்) சட்டத்தினால் (3-1-1977 முதல் செல்திறம் பெறுமாறு) விட்டுவிடப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/270&oldid=1466811" இலிருந்து மீள்விக்கப்பட்டது