பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

245

31. வழிப்போக்கர் விடுதிகளும் வழிப்போக்கர் விடுதி நடத்துவோரும்.
32. I ஆம் பட்டியலில் குறித்துரைக்கப்பட்டவை அல்லாத கூட்டுருமங்களைக் கூட்டுருமங்களாகப் பதிவுசெய்தல், ஒழுங்குறுத்துதல் மற்றும் முடிவுறுத்துதல்; மேலும், பல்கலைக்கழகங்கள்; கூட்டுருமமாகப் பதிவு செய்யப்படாத வணிக, இலக்கிய, அறிவியல், சமய மற்றும் பிற சங்கங்களும் கழகங்களும்; கூட்டுறவுச் சங்கங்கள்.
33. காட்சி அரங்குகளும் நாடக நிகழ்ச்சிகளும்; 1 ஆம் பட்டியலின் 60ஆம் பதிவின் வகையங்களுக்கு உட்பட்டு திரைப்படங்கள்; போட்டி விளையாட்டுகளும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் களிப்பூட்டும் நிகழ்ச்சிகளும்.
34. பந்தயங்கட்டுதலும் சூதாடுதலும்.
35. மாநிலத்திடம் உற்றமைந்துள்ள அல்லது அதன் உடைமையிலுள்ள கட்டுமான வேலைகள், நிலங்கள் மற்றும் கட்டடங்கள்.
[1][36. ★★]
37. நாடாளுமன்றம் இயற்றும் சட்டத்தின் வகையங்களுக்கு உட்பட்டு மாநிலச் சட்டமன்றத்திற்கான தேர்தல்கள்.
38. மாநிலச் சட்டமன்றத்தின் உறுப்பினர்கள், சட்டமன்றப் பேரவைத் தலைவர், துணைத்தலைவர் மற்றும் சட்டமன்ற மேலவை இருக்குமாயின், அதன் தலைவர், துணைத்தலைவர், ஆகியோரின் வரையூதியங்களும் படித்தொகைகளும்.
39. சட்டமன்றப் பேரவைக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் குழுக்களுக்கும், சட்டமன்ற மேலவை இருக்குமாயின், அந்த மேலவைக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் குழுக்களுக்கும் உள்ள அதிகாரங்களும் மதிப்புரிமைகளும் காப்புரிமைகளும்; மாநிலச் சட்டமன்றக் குழுக்களின் முன்பு சான்றளிப்பதற்காகவோ ஆவணங்களை முன்னிலைப்படுத்துவதற்காகவோ நபர்களை வருமாறு செய்வித்தல்.
40. மாநில அமைச்சர்களின் வரையூதியங்களும் படித்தொகைகளும்.
41. மாநில அரசுப்பணியங்கள்; மாநில அரசுப்பணியாளர் தேர்வாணையம்.
42. மாநில ஓய்வூதியங்கள், அதாவது, மாநிலத்தினாலோ மாநிலத்தின் திரள்நிதியத்திலிருந்தோ வழங்கப்படும் ஓய்வூதியங்கள்.
43. பொதுமக்களிடம் மாநிலத்தின் உறுகடன்.
44. புதையற்பொருள்.
45. வருவாயைக் கணித்தலும் ஈட்டுதலும் உள்ளடங்கலாக, நிலவருவாய்; நிலப் பதிவணங்களைப் பேணிவருதல்; வருவாய் நோக்கங்களுக்கான நில அளவை; உரிமைகளின் பதிவணங்கள்; மற்றும் வருவாயை மாற்றாக்கம் செய்தல்.
46. வேளாண் வருமானத்தின் மீதான வரிகள்.
47. வேளாண் நிலத்திற்கு வாரிசுரிமை பொறுத்த தீர்வைகள்.
48. வேளாண் நிலம் பொறுத்த இறங்குசொத்துத் தீர்வை.
49. நிலங்கள் மற்றும் கட்டடங்கள் மீதான வரிகள்.
50. கனிம வள மேம்பாடு தொடர்பாக நாடாளுமன்றம் சட்டத்தினால் விதிக்கும் வரம்புகள் எவற்றிற்கும் உட்பட்டு, கனிம உரிமைகள் மீதான வரிகள்.


  1. 36ஆம் பதிவு, 1956ஆம் ஆண்டு அரசமைப்பு (ஏழாம் திருத்தம்) சட்டத்தின் 26ஆம் பிரிவினால் விட்டுவிடப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/271&oldid=1466812" இலிருந்து மீள்விக்கப்பட்டது