பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246


51. மாநிலத்தில் உற்பத்திசெய்யப்பட்ட அல்லது உண்டாக்கப்பட்ட பின்வரும் சரக்குகள் மீதான ஆயத் தீர்வைகளும், இந்தியாவின் பிற இடங்களில் உற்பத்திசெய்யப்பட்ட அல்லது உண்டாக்கப்பட்ட இவை போன்ற சரக்குகளின் அதே வீதத்தில் அல்லது அதைவிடக் குறைந்த வீதத்தில் விதிக்கப்படும் எதிரீட்டுத் தீர்வைகளும்:-

(அ)மனிதர் உட்கொள்வதற்கான வெறியம் கலந்த மதுக்குடி வகைகள்;
(ஆ)அபின், இந்தியக் கஞ்சா மற்றும் பிற மயக்க மருந்துப் பொருள்களும் மயக்கப் பொருள்களும்; ஆனால், வெறியம் அல்லது இந்தப் பதிவின் (ஆ) உள்பத்தியில் சேர்க்கப்பட்டுள்ள பொருள் எதுவும் அடங்கிய மருந்துக்கும் ஒப்பனைக்குமான தயாரிப்புகள் இதில் உள்ளடங்குவதில்லை.

52. நுகர்மானத்திற்காக, பயன்பாட்டிற்காக அல்லது விற்பனைக்காக வட்டாரப் பகுதிக்குள் வரும் சரக்குகள் மீதான வரிகள்.
53. மின்விசை நுகர்மானம் அல்லது விற்பனை மீதான வரிகள்.
54. Iஆம் பட்டியலின் 92அ பதிவின் வகையங்களுக்கு உட்பட்டு செய்தித் தாள்கள் அல்லாத பிற சரக்குகளின் விற்பனை அல்லது கொள்வினை மீதான வரிகள்.
55. செய்தித் தாள்களில் வெளியிடப்படும் விளம்பரங்கள், வானொலியின் அல்லது தொலைக்காட்சியின் வழி செய்யப்படும் விளம்பரங்கள் ஆகியவை அல்லாத விளம்பரங்கள் மீதான வரிகள்.
56. சாலை அல்லது உள்நாட்டு நீர்வழிகள் வழியாக ஏற்றிச் செல்லப்படும் சரக்குகள் மற்றும் பயணிகள் மீதான வரிகள்.
57. III ஆம் பட்டியலின் 35ஆம் பதிவின் வகையங்களுக்கு உட்பட்டு, காந்த வண்டிகள் உள்ளடங்கலாக, சாலைகளின்மீது பயன்படுத்துவதற்குப் பொருத்தமானவையாகவும் எந்திரத்தால் அல்லது எந்திரமின்றி உந்தப்படுவனவாகவும் உள்ள ஊர்திகள் மீதான வரிகள்.
58. விலங்குகள் மற்றும் படகுகள் மீதான வரிகள்.
59. சுங்கக் கட்டணங்கள்.
60. விழைதொழில்கள், வணிகங்கள், கொள்பணிகள் மற்றும் வேலையமர்த்தங்கள் மீதான வரிகள்.
61. தலைக்கட்டு வரிகள்.
62. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், களிப்பூட்டும் நிகழ்ச்சிகள் பந்தயங்கட்டுதல், சூதாடுதல் ஆகியவற்றின் மீதான வரிகள் உள்ளடங்கலாக ஆடம்பரப்பொருட்கள் மீதான வரிகள்.
63. முத்திரைத்தீர்வை வீதங்கள் பற்றி 1 ஆம் பட்டியலின் வகையங்களில் குறித்துரைக்கப்படாத ஆவணங்களைப் பொறுத்த முத்திரைத்தீர்வை வீதங்கள்.
64. இந்தப் பட்டியலிலுள்ள பொருட்பாடுகள் எவற்றையும் பொறுத்து, சட்டங்களுக்கு எதிரான குற்றச்செயல்கள்.
65. இந்தப் பட்டியலிலுள்ள பொருட்பாடுகள் எவற்றையும் பொறுத்து, உச்ச நீதிமன்றம் அல்லாத பிற அனைத்து நீதிமன்றங்களின் அதிகாரவரம்பும் அதிகாரங்களும்.
66. இந்தப் பட்டியலிலுள்ள பொருட்பாடுகள் எவற்றையும் பொறுத்த கட்டணங்கள், ஆனால், நீதிமன்றம் எதிலும் பெறப்படும் கட்டணங்கள் நீங்கலாக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/272&oldid=1466813" இலிருந்து மீள்விக்கப்பட்டது