பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

247


பட்டியல் III —ஒருங்கியல் பட்டியல்

1. குற்றவியல் சட்டம்-இந்த அரசமைப்பின் தொடக்கநிலையில் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டத்தில் உள்ளடங்கிய அனைத்துப் பொருட்பாடுகளும் உள்ளடங்கலாக, ஆனால் I ஆம் பட்டியலிலோ IIஆம் பட்டியலிலோ குறித்துரைக்கப்பட்ட பொருட்பாடுகள் எவற்றையும் பொறுத்த. சட்டங்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் நீங்கலாக மற்றும் குடியியல் அதிகாரத்திற்கு உதவும் வகையில் கடல், தரை அல்லது வான் படைகளை அல்லது ஒன்றியத்துப் பிற ஆயுதப் படைகள் எவற்றையும் பயன்படுத்துதல் நீங்கலாக.

2. குற்றவியல் நெறிமுறை இந்த அரசமைப்பின் தொடக்கநிலையில் குற்றவியல் நெறிமுறைத் தொகுப்புச்சட்டத்தில் உள்ளடங்கிய அனைத்துப் பொருட்பாடுகளும் உள்ளடங்கலாக.

3. தடுப்புக்காவல் ஒரு மாநிலத்தின் பாதுகாப்பு, பொது ஒழுங்கமைதி பேணுதல் அல்லது சமுதாயத்திற்கு இன்றியமையாத பொருள்களை வழங்குவதையும் பணியங்களையும் பேணிவருதல் தொடர்பான காரணங்களுக்காகத் தடுப்புக்காவலில் வைத்தல்; அத்தகைய காவலில் வைக்கப்பட்டவர்கள்.

4. கைதிகளையும் குற்றஞ்சார்த்தப்பெற்றவர்களையும், இந்தப் பட்டியலின் 3ஆம் பதிவில் குறித்துரைக்கப்பட்ட காரணங்களுக்காகத் தடுப்புக் காவலில் வைக்கப்பெற்றவர்களையும், ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாற்றுதல்.

5. திருமணமும் மணமுறிவும்; குழந்தைகளும் இளவர்களும்; மகவேற்பு; விருப்புறுதிகள் விருப்புறுதியற்ற நிலை மற்றும் உரிமைஇறக்கம்; கூட்டுக் குடும்பமும் பாகப்பிரிவினையும்; இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டிமுன்பு, நீதிமுறை நடவடிக்கைகளில் தரப்பினர்களாக இருந்தவர்கள் எந்தப் பொருட்பாடுகள் பொறுத்துத் தங்கள் இனமுறைச் சட்டத்திற்கு உட்பட்டவர்களாக இருந்தார்களோ அந்தப் பொருட்பாடுகள் அனைத்தும்.

6. வேளாண் நிலம் அல்லாத பிற சொத்தின் உரிமைமாற்றம் ஒப்பாவணங்களையும் ஆவணங்களையும் பதிவு செய்தல்.

7. ஒப்பந்தங்கள் கூட்டாண்மை முகமை, ஏற்றிச் செல்லும் ஊர்தி ஒப்பந்தங்கள், பிற தனியுறு ஒப்பந்த வகைகள் உள்ளடங்களாக, ஆனால், வேளாண் நிலம் தொடர்பான ஒப்பந்தங்கள் நீங்கலாக.

8. வழக்குத் தொடர்வதற்குற்ற தீங்குகள்.

9. சிலவகை வணிகத்தில் நொடிப்புநிலை மற்றும் நொடிப்புநிலை.

10. பொறுப்புக்கட்டளைகளும் பொறுப்புக்கட்டளையர்களும்.

11. தலைமைக் காப்பாட்சியாளர்கள் மற்றும் அரசுப் பொறுப்புக்கட்டளையர்கள்.

11அ. நீதி நிருவாகம்; உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றங்களும் நீங்கலாக, அனைத்து நீதிமன்றங்களின் அமைப்பும் செயலமைப்பும்.

12. சான்றும் ஆணைமொழிகளும்; சட்டங்கள், அரசுச் செயல்கள், அரசுப் பதிவணங்கள், நீதிமுறை நடவடிக்கைகள் ஆகியவை குறித்த சான்றேற்பு.

13. உரிமையியல் நெறிமுறை-இந்த அரசமைப்பின் தொடக்க நிலையில் உரிமையியல் நெறிமுறைத் தொகுப்புச் சட்டத்தில் உள்ளடங்கிய பொருட்பாடுகள் அனைத்தும் உள்ளடங்கலாக, காலவரம்பு மற்றும் பொதுவர்தீர்ப்பு.

14. நீதிமன்ற அவமதிப்பு, ஆனால் உச்ச நீதிமன்ற அவமதிப்பு நீங்கலாக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/273&oldid=1466846" இலிருந்து மீள்விக்கப்பட்டது