பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252

19. 1951 ஆம் ஆண்டு விசைத்தொழில்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குறுத்தம்) சட்டத்தின் (சட்டம் LXV/1951) அத்தியாயம் IIIஅ, 1953ஆம் ஆண்டு விசைத்தொழில்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குறுத்தம்) திருத்தச் சட்டத்தின் (சட்டம் XXVI/1953) 13 ஆம் பிரிவினால் புகுத்தப்பட்டது.
20. 1948 ஆம் ஆண்டு மேற்கு வங்காள நில மேம்பாடு மற்றும் திட்டமிடுதல் சட்டம் (மேற்கு வங்காளச் சட்டம் XXI /1948) மேற்கு வங்காளச் சட்டம் XXIX/1951 ஆல் திருத்தம் செய்யப்பட்டது.
21. 1961 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரேதச வேளாண் கைப்பற்று நிலங்கள் மீதான உச்சவரம்புச் சட்டம் (ஆந்திரப் பிரதேசச் சட்டம் X/1961).
22. 1961 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச (தெலுங்கானா பரப்பிடம் குத்தகையுரிமை மற்றும் வேளாண் நிலங்கள் (செல்லுந்தன்மையாக்குதல்) சட்டம் (ஆந்திரப் பிரதேசச் சட்டம் XXI/1961).
23. 1961 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச (தெலுங்கானா பரப்பிடம்) இஜாரா மற்றும் கௌலி நிலம் முறைகேடான பட்டாக்கல் நீக்கறவு செய்தல் மற்றும் சலுகைத் தீர்வை ஒழித்தல் சட்டம் (ஆந்திரப் பிரேதசச் சட்டம் XXXVI/1961).
24. 1959 ஆம் ஆண்டு பொதுத் தன்மையதான சமய அல்லது அற நிறுவனத்துக்கு உரிய நிலங்களை அசாம் அரசு கையகப்படுத்துதல் சட்டம் (அசாம் சட்டம் IX/1961). 25. 1953 ஆம் ஆண்டு பீகார் நிலச் சீர்திருத்தங்கள் (திருத்தம்) சட்டம் (பீகார் சட்டம் XX/1954).
26. 1961 ஆம் ஆண்டு பீகார் நிலச் சீர்திருத்தங்கள் (உச்சவரம்புப் பரப்பிடத்தை நிருணயித்தல் மற்றும் மிகையான நிலத்தைக் கையகப்படுத்துதல்) சட்டம் (பீகார் சட்டம் XII/1962) (இந்தச் சட்டத்தின் 28ஆம் பிரிவு தவிர).
27. 1954 ஆம் ஆண்டு பம்பாய் தாலுக்தாரி நிலப்பிடிமானமுறை ஒழிப்பு (திருத்தம்) சட்டம் (பம்பாய் சட்டம் I/1955).
28. 1957 ஆம் ஆண்டு பம்பாய் தாலுக்தாரி நிலபிடிமானமுறை ஒழிப்பு (திருத்தம்) சட்டம் (பம்பாய் சட்டம் XVIII/1958).
29. 1958 ஆம் ஆண்டு பம்பாய் இனாம்கள் (கட்ச் பரப்பிடம்) ஒழிப்புச் சட்டம் (பம்பாய் LLI XCVIII/1958).
30. 1960 ஆம் ஆண்டு பம்பாய் குத்தகையுரிமை மற்றும் வேளாண் நிலங்கள் (குஜாத் திருத்தம்) சட்டம் (குஜராத் சட்டம் XVI/1960).
31. 1960 ஆம் ஆண்டு வேளாண் நிலங்கள் உச்சவரம்புச் சட்டம் (குஜராத் சட்டம்
XXVII/1961).
32. 1962 ஆம் ஆண்டு சக்பாரா மற்றும் மேஹ்வாசி உரிமைநிலச் சொத்துக்கள் (நிலவுடைமை உரிமைகள் ஒழிப்பு முதலியன) ஒழுங்குறுத்தும்விதி (குஜராத் ஒழுங்குறுத்தும்விதி I/1962).
33. 1963 ஆம் ஆண்டு குஜராத் எஞ்சிய மாற்றாக்கங்கள் ஒழிப்புச் சட்டம் (குஜராத் சட்டம் XXXIII/1963) அதன் 2ஆம் பிரிவின் (3)ஆம் கூறின் (ஈ) உட்கூறில் குறிப்பிடப்பட்ட மாற்றாக்கத்திற்கு இந்தச் சட்டம் தொடர்புடையதாயிருக்கிற அளவுக்குத் தவிர.
34. 1961 ஆம் ஆண்டு மகாராஷ்டிர வேளாண் நிலங்கள் (கைபற்று நிலங்கள் மீதான உச்சவரம்பு) சட்டம் (மகாராஷ்டிரச் சட்டம் XXVII/1961).
35. 1961 ஆம் ஆண்டு ஐதராபாத் குத்தகையுரிமை மற்றும் வேளாண் நிலங்கள் (மறுசட்டமியற்றல், செல்லுந்தன்மையதாக்குதல் மற்றும் கூடுதல் திருத்தம்) சட்டம் (மகாராஷ்டிரச் சட்டம் XLV/1961).
36. 1950 ஆம் ஆண்டு ஐதராபாத் குத்தகையுரிமை மற்றும் வேளாண் நிலங்கள் சட்டம் (ஐதராபாத் சட்டம் XXI/1950).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/278&oldid=1466855" இலிருந்து மீள்விக்கப்பட்டது