பக்கம்:Dikshithar Stories.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி ட் சி தர் க ைத க ள் il டுமென்று இச்சைகொண்டவராய், தனக்கு அறிமுகமான சென்னை ராஜதானி மந்திரி ஒருவரிடம் போய், தனக்கு பிரைவேட் டிக்கெட் ஒன்று வாங்கிக்கொடுக்கும்படி மிகவும் மன்ருடிக் கேட்டார். அதற் கவர், 'எனக்கே ஒரு டிக்கட் கிடைப்பது பரேதப் பிரயத்னா யிருந்தது; உங்களுக்கு ஒன்று வாங்கிக் கொடுக்க ன்னுல் முடி யாது’ என்று பதில் சொல்லி விட்டார். அதன்பேரில் நமது திட் சிதர் ஒரு யுக்தி செய்தார். டில்லி தர்பாரில் நடக்க வேண்டிய சங் கீதக் கச்சேரிக்காகச் சென்னையிலிருந்து ஒரு சங்கீத வித்வானும் பக்கவாத்தியமாக ஒரு பிடில் வித்வானும் மிருதங்கக்காரனும் அங்கு அழைக்கப்பட்டிருந்தனர். அ. வர் க ள் எல்லோருக்கும் போலீஸ்காரர் மூலமாக ஒவ்வொரு டிக்கெட்டு கொடுக்கப்பட்டிருந் தது ; அவர்களுள் மிருதங்கம் வாசிப்பவன் இவருக்குத் தெரிந்த வன்; அவனிடம் போய் உனக்கு நாளை தர்பாரில் மிருதங்கம் வாசிக்க என்ன கொடுக்கபோகிரு.ர்கள் ? என்று கேட்க, அவர் நூறு ரூபாய் கொடுப்பதாக ஏற்பாடாயிருக்கிறது என்று பதில் சொல்ல, 'அந்த தாறு ரூபாய்க்குப் பதிலாக நான் இருநூறு ரூபாய் தரு கிறேன்; நான் சொன்னபடி மாத்திரம் நீ செய்யவேண்டும்; இன் றிரவு ஏதோ காய்ச்சல் வந்ததாகப்படுத்துக்கெர்ள் நாளே சாயங் காலம் வரை படுக்கையை விட்டு எழுந்திாாதே; உன் மிருதங்கத்தை என்னிடம் கொடு; நான் அதை எடுத்துக்கொண்டுபோய், உனக்குப் பதிலாக வாசித்து விட்டு வருகிறேன்!” என்று சொல்ல, அவனும் வாசிக்கும் கஷ்டமும் மிகுந்தது வரும்படிக்கும் இாட்டிப்பாய் வருகிறது என்று சந்தோஷத்துடன் ஒப்புக்கொண்டான். அன் றிரவு தான் காய்ச்சலாயிருப்பதாயும், தனக்குப் பதிலாக ஒருவர் மிருதங்கம் வாசிப்பதாயும், சங்கீத வித்வானுக்குச் சொல்லியனுப்பி ன்ை அவரும், அம்மட்டும் எவனுவது பதிலாகக் கிடைத்தானே என்று ஒப்புக்கொண்டு, நமது தீட்சிதரை அழைத்துக்கொண்டு போக, அந்த டிக்கட்டுடன் தர்பாருக்குள் நம்மவர் துழைந்து க்ர்பார் ஆரம்பமாகும் சமயத்திற்கு முன்பாக வந்திருந்தவர்களின் மனே உற்சாகத்திற்காகச் சங்கீதக் கச்சேரியில் சங்கீத வித்வானின் பாட் டிற்கு மிருதங்கம் வாசித்துக்கொண்டிருந்தார். நமது தீட்சிதர் பல பயிற்சிகளுடன் மிருதங்கம் வாசிப்பதையும் கற்றிருந்தார். கொஞ்ச

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Dikshithar_Stories.pdf/15&oldid=726328" இலிருந்து மீள்விக்கப்பட்டது