பக்கம்:Harischandra.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 ஹரிச்சந்திரன் (அங்கம்-5 இவர்கள் தன் கையால் அக் குழந்தையைக் கொல்லும் பொழுது யாரும் நேராகப் பார்த்ததாகச் சொல்லவில்லை. இவர் கள்தான் கொன்றிருக்க வேண்டுமென்று, காவலாளிகள் நம்மை ஊகிக்கும்படி கேட்கிருர்கள். இந்த விஷயத்தில் மஹாராஜா அவர்கள் தீர்க்காலோசனை செய்யவேண்டு மென் பது என்னுடைய பிரார்த்தன. கொலை முதலிய விஷயங்க ளில் சுற்றுப்பக்கத்தி லிருக்கப்பட்ட சந்தர்ப்பங்களைக் கொண்டு தீர்மானத்திற்கு வருவது அவ்வளவு உசிதமாகாது, இவர்கள்தான் கொன்றிருக்க வேண்டுமென்பதற்கு அநேக ஆட்சேபனைகள் இருக்கின்றன. முதலில் அபலையாகிய இம் மாது, ஒண்டியாக, நடுநிசியில், அதிக காவலமைந்துள்ள நமது அரண்மனை அந்தப்புரத்தில் ஒருவரும் அறியாதபடி எப்படி துழைந்திருக்கக்கூடும் அரண்மனைக்குள் நுழைந்தபொழுதா வது, அதைவிட்டு வெளியே போகும்பொழுதாவது, ஒரு வரும் இவர்களைக் கண்டதாக சாட்சியம் சொல்லவில்லை. அந் தப்புரவாயிற் கதவு பூட்டியபடி இருக்கும்பொழுது, ஒரு ஸ்திரீ, எப்படி உள்ளே நுழைந்து ஒரு குழந்தையை எடுத் துக்கொண்டு வெளியே போயிருக்கக் கூடும் ? மதிலேறிக் குதித்துச் சென்ருர்கள் என்று கூறுவது, ஆண்மக்களுக்கே அசாத்தியமான காரியம். இம்மாது குழந்தையைக் கையில் துரக்கிக்கொண்டு குதித்துச் சென்ருர்கள் என்று எண்ணுவது, அறிவிற்கு அமைந்ததன்று. மஹாராஜா, இவ்விஷயத்தைப் பற்றி நான் யோசிக்க யோசிக்க, இவ் விஷயம் அத்யாஸ்சர்ய மாய்த் தோற்றுகிறது. இவர்கள்மீது சாற்றப்பட்டிருக்கும் குற் றம் என்னவென்ருல், மஹாராஜா அவர்கள் மைந்தன் அணி ந்துகொண்டிருந்த ஆபரணங்களை அபஹரிக்கும் பொருட்டு, அக்குழந்தையைத் திருடிச் சென்று கொன்ருர்கள் என்பதே. ஆபரணங்களைக் கவரவேண்டி இதைச் செய்திருந்தால், குழந் தையைக் கொல்வானேன் ? கொல்ல வேண்டிய காரணமில் லேயே ; ஆபரணங்களை கவருமுன் குழந்தையைக் கொன்றி ருக்க வேண்டுமென்று யோசிப்போமாயின், கொன்ற குழந் தையை, ஆபரணங்களை அபகரித்தபின், தன்னுடன் அரண் மனக்கு வெளியே எடுத்துச் செல்ல, இவர்கள் பயித்தியக் காரியா யிருக்கவேண்டும். இருந்த விடத்தில் குழந்தையை விட்டுப் போவதை விட்டு, கைப்பிடியாய்க் காவலாளிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/100&oldid=726760" இலிருந்து மீள்விக்கப்பட்டது