பக்கம்:Harischandra.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[.yئ نتی 5 ஹரிச்சந்திான் முதல் அங்கம் முதற் காட்சி இடம்-விஸ்வாமித்திார் ஆச்சிரமம், வில்வாமித்திார் யோசித்த வண்ணம் வருகிருர், சொல்லுதல் யார்க்கும் எளிதாம் சொல்லிய வண்ணம் செய்தல் அரிதாம், என்கிற பழமொழியின் உண்மையை இத் தனே வயதாகியும் இன்னும் நான் கற்றிலனே ! இந்திரன் சபையின் முன்பாக என்ன மூடத்தனமாய் நான் சபதம் செய்துவிட்டேன்! எனது ஜன்மத்வேஷியாகிய வசிஷ்டர் ஆய்ந்தோய்ந்து பாராது அவ்வாறு கூறியிருக்க மாட்டார். அவசரப்பட்டு கூறிவிட்டு பிறகு அல்லற்படுபவன் நானே ! உடன்பிறந்த குணம் உயிர் உள்ளளவும், என்பதுபோல், கூத்ரியர்களுக்குரிய முன்கோபம் இன்னும் என்னே விட்டகல வில்லே, சுன்னதான் பிரம்மரிஷியானபோதிலும், அந்த சாங் தம், இன்னும் எனக்குவாவில்லை அந்த ஹரிச்சந்திர மன்னவ னுடைய அத்யாஸ்சரியமான குணங்களைக் கேட்கக் கேட்க, நான் எடுத்துக்கொண்டவேலே ஈடேரு தென்றே எண்ணும் படிச் செய்கிறது. ஆயினும் அதைப்பற்றி இப்பொழுது ஏங்கி ஆவதென்ன ? ஒரு முாை சபதம் செய்தபின், பின் வாங்கு வதா? நானே, விஸ்வாமித்திரனே, பின் வாங்குவது ? இது வரையில் நான் எடுத்துக்கொண்ட வேலையினின்றும்-எப் படிப்பட்ட அசாத்தியமானதாயிருந்த போதிலும்-எதில்பின் வாங்கினேன் தீர்மானித்த கர்மாவினின்றும் திரும்பினன் கெளசிகன், என்னும் பெயர் எனக்கு வேண்டாம். ஜெயமோ அபஜெயமோ, எடுத்த காரியத்தை இடையில் கைவிட்டான் காதிமைந்தன், என்று, இவ்வுலகம் என்னே இகழ இடங் கொடேன். இந்த கீர்த்தியாவது எனக்கிருக்கட்டும் !-ஆயி லும் இப்பொழுது நான் என்ன செய்வது ஹரிச்சந்திரனே சத்தியம் பிறழச்செய்யவேண்டும். இது ஸ்வல்பமான வேலை யன்று ; அவன் திங்தைக்காக இன்னுெரு ஸ்வர்க்கத்தை கான் ஏற்படுத்தியதும் இதைவிட சுலபமான காரியமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/11&oldid=726770" இலிருந்து மீள்விக்கப்பட்டது