பக்கம்:Harischandra.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 ஹரிச்சந்திரன் (அங்கம்-5 ஹரிச்சந்திரா! இக் கொடுங் கொலையைச் செய்வதில்லை யென்று எனக்கு வாக்களித்தாலன்றி இவ்விடம் விட்டுப் பெயரேன்! ஹரிச்சந்தியா! உனக்கென்ன பயித்தியம் பிடித்து விட்டதா ? அல்லது உன்.அறிவு உன்னே விட்டுப் பிரிந்ததோ? பழுதிலாப் பரிதியின் வம்சத்துதித்த, இசஷ்வாகு குலத்திற் பிறந்த, அயோத்தியை ஆண்ட அரசனகிய ,ே ஒரு குற்றமு மறியாத பேதையாகிய உன் மனைவியை, கொடும்பாவியாகிய கொலைஞனைப் போல் கொல்வதா ? இந்த தர்மத்தை எங்கு கற்ருய் ? இது தானே நீ அறிந்த திே உனது குருவாகிய வசிஷ்டர் உனக்குக் கற்பித்தது இதுதானே ? ஹரிச்சந்திரா ! என் வார்த்தையை முன்பு கேட்கமாட்டேன் என்ருய், இப் பொழுதாவது கேள். என்னே விட்டுப் பிரிந்தபின் உனக்கும் உன் மனைவி மக்களுக்கும் நேரிட்ட இடுக்கண்களை யெல்லாம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். உன்னுடைய பிடிவாதமா னது உன்னே எந்த ஸ்திதிக்குக் கொண்டு வந்துவிட்டது என் பதை நீயே பார்க்கிருய்-இப்பொழுதாவது முனிசிரேஷ்டரே, குறுக்கே பேசுவதற்காக அடியேனே மன் னிக்கவேண்டும். ஆயினும் தாங்கள் இவ்வேலையை நான் விடும் படி எனக்குச் சொல்வதானுல், அந்த சிரமத்தைத் தாங்கள் மேற்கொள்ளாகிருக்கும்படி வேண்டுகிறேன். முன்பே அதிக காலதாமதம் செய்துவிட்டேன், இனியும் தாமதிப்பது நியாய மன்று ; ஆகவே தாங்கள் தயை செய்து ஒருபுறம் ஒதுங்கி யிரும். ஹரிச்சந்திரா இறந்த உன் மைந்தன் மீதும், இறக்கச்சித்த மாயிருக்கும் உன் மனைவிமீதும், ஆணையிட்டு உன்னைக் கேட் கும்படி வேண்டுகிறேன். இனிமேலாவது பிடிவாதம் செய் யாதே. உன் ஐஸ்வர்யத்தை இழந்தாய்-அரசை இழந்தாய் -அருமை மைக்தனே இழந்தாய்-எல்லாவற்றையும் இழந் தாய் முனியுங்கவரே, எல்லாவற்றையும் நான் இழக்கவில்லேஎனது சத்யம் என்னே விட்டு அகலவில்லை!-அது இருக்கும் வரையில் உண்மையில் நான் ஒன்றையும் இழந்த வனன்று !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/110&oldid=726771" இலிருந்து மீள்விக்கப்பட்டது