பக்கம்:Harischandra.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 ஹரிச்சந்திரன் (அங்கம்.5 ஹ. முனிபுக்கவரே, இவ்விஷயத்தில் என் கடைசி வார்த்தையைக் கேட்டருள்வீராக ஆசந்திரார்க்கர்கள் தத்தம் நெறியை விட் டகன்றபோதிலும், ஆகாயத்திற் பிரகாசிக்கும் உடுக்கள் பல பலவென்று உதிர்ந்தபோதிலும், அஷ்ட குலாசலங்கள் அடி யுடன் பறிக்கப்பட்டபோதிலும், வேலைகரை யிழந்தாலும், வேதநெறி பிறழ்ந்தாலும், அம்மூவரே என் முன்னின்று வேண்டிய போதிலும், என் சத்ய விரதத்தை விடேன்! விடேன்! விடேன்! ஆகவே சற்று ஒதுங்கியிரும்-சந்திரமதி: சித்தமாயிருக்கிருயா ? 牙。 ஆம் பிராண நாதா ! ஹ. வாளை ஒக்கி எல்லாம் வல்ல கடவுளே ! நான் மேற்கொண்ட சத்ய விரதம் அணுவளவேனும் தவருதவனுயின் இவ்வாளா னது, ஒரே வெட்டாய், சந்திரமதியின் கந்தரத்தை (பாமசிவம் பர்ர்வதியுடனும், பிரம்ம விஷ்ணுக்களுடனும், இக் திான் முதலிய முப்பத்து முக்கோடி தேவர்களுடனும்'வசிஷ் டர் நாதர் முதலிய ரிஷிகளுடனும், ஆகாயத்தில் தோற்று கிருர். தேவதுந்து பி முழங்குகிறது; பூமழை பெய்கிறது.) ! ஹரிச்சந்திான் காத்தைப் பிடித்திச் தடுத்து) பொறு பொறு( هلا ஹரிச்சந்திரா வேண்டாம்! நாம் ஆக்கினை யிடுகிருேம். ஹ. ச. அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகா! அண்ட சராசரங் களையும் ஆக்கி அளித்து அழிக்கும் அரனே! மூவர் முதலே! முத்திக்காசே! அதைாட்சகா ஆபத்பாக்தவா! சம்போ ! சங்கரா! சத்யமூர்த்தி! சரணம்! சரணம் ! f (பன்முறை படிமீது விழுந்து சமஸ்கரிக்கின்றனர். ஹரிச்சந்திரா சந்திரமதி எழுந்திருங்கள்-நீங்கள் முன் أسا ஜன்மங்களிற் செய்த பாபங்களெல்லாம் பரிஹரிக்கப்பட்டன. இதுவரையில் நீங்கள் அனுபவித்த துன்பங்களையெல்லாம் மறந்து விடுங்கள் ! ஹரிச்சந்திரா ! உனது சத்ய விரதத்தின் திறம் இப்படிப்பட்டதென உலகத்தவர் எல்லாம் நன்கறியும் பொருட்டே, உன்னே இத்தனை இடையூறுகளுக்கும் உள் ளாக்கினுேம். இனி, உண்மை நெறியினின்றும் ஒரனுவும் பிறழாத உத்தமனென, உன் பெயர் உலகங்க ளுள்ளளவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/112&oldid=726773" இலிருந்து மீள்விக்கப்பட்டது