பக்கம்:Harischandra.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.8) வி. ஹரிச்சந்திரன் 107 அர்ஜிதமாய் கிற்கும்! இதுவரையில் அனுபவித்த துக்கங்களை யெல்லாம் மறந்து, சந்தோஷத்துடன் நெடுநாள் இந் நில உல கத்தை யாண்டு, பிறகு, உன் மனைவி மக்களுடன் நமது பாதத்தை வந்து சேர்வாயாக-வசிஷ்டரே, உமது சிஷ்யனே அயோத்திக்கு அழைத்துச் சென்று அந் நாட் டாசனுக அணி முடியினைச் சூட்டும். பக்தானுகூலா! பாமதயாளு பரமசிவமே ! தாங்கள் அறியாத தொன் றுண்டோ அடிமையாகிய நான் அணி முடியை மறு படி அணியலாகுமோ ? அன்றியும் தானமாகக் கொடுத்த அச சைத் தமியேன் மறுபடியும் கொள்வதோ ? உம்ரிச்சந்திரா, அதை குறித்து உனக்குக் கவலை வேண்டாம். நீ எனக்கு தானமாகக் கொடுத்த உன் அரசை, உனக்கே மனப் பூர்வமாய், உனது .சத்ய விரதத்தை மெச்சினவனுய், மறுபடியும் தானமாக கொடுக்கிறேன் ; இதோ பெற்றுக் கொள். ஸ்வாமி, மகனே யிழந்து, மனேவியும் குற்றஞ் சாற்றப் பட்டு, மயானத்து வெட்டியானுகிய எனக்கு அரசு என்னத்திற்கு ? ஹரிச்சந்திரா! உன் கவலை யனைத்தும் ஒழி. உன் மைந்தன் உண்மையில் இறக்கவில்லை, உன் மனைவியும் குற்றவாளியல்ல. இவை யனேத்தும் விஸ்வாமித்திரர் தனது கபோ மஹிமை யால், வசிஷ்டருடன் அவருக்கு நேர்ந்த ஒர் சபதத்தின்படி, உனது சத்ய விாதத்தைப் பரிசோதிக்கும் பொருட்டு, செய்த சூழ்ச்சிகளேயாம். தேவதாசா எழுந்திரு. தேவதாசன் எழுந்திருக்கிருன், ஹரிச்சந்திரனும் சந்திர மதியும் அவனைக்கட்டி யணைக்கின்றனர். பூமழை பொழிகின்றது.! அன்றியும், வாஸ்தவத்தில் காசி மன்னன் புதல்வனும் கொல் லப்பட வில்லை. அவனும் உறங்கி எழுந்தவன்போல் எழித் திருந்திருப்பான் இதுவரையில். ஆகவே சந்திரமதியின் மீது ஒரு குற்றமு மில்லையென்று காசிமன்னன் முதலியோர் அறி வார்; மேலும் நீ பறையனுக்கு அடிமைப் பட்டதாக நினத்து வருந்தவேண்டாம். விஸ்வாமித்திரர் வேண்டுகோளுக் கிசைந்து உன்னே அடிமை கொண்டது யமதர்மராஜனே ! சந்திரமதியை யும் தேவதாசனேயும் அடிமை கொண்டவர் அக்னிதேவனே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/113&oldid=726774" இலிருந்து மீள்விக்கப்பட்டது