பக்கம்:Harischandra.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.]] ஹரிச்சந்திரன் 7 நா. 砷、 தேசம் செய்ய வேண்டும் நான். கேளும் என் வார்த்தையை, அந்த ஹரிச்சந்திரன் வாயினின்றும் அசத்தியம் வரும்படி யாகச் செய்ய முயல்வதைவிட, ஆர்கலியின் அலைகளை அமர்க் திருக்கச் செய்யலாம், ஆதித்ய்னே ஆகாய மார்க்கத்தினின்றும் அகன்று போகச் செய்யலாம், காலசக்கரத்தைக் கையாற் பிடித்து நிலை நிறுத்தலாம், கருதரிய எக் கர்மத்தையும் செய்து முடிக்கலாம், அம்மன்னவன் வாயினின்றும் அணுவளவு அசத்தியம் வரச்செய்வது, அசாத்தியத்திலும் அசாத்திய மாம் விவேகியைப்போல் இவ்வேலையை இதனுடன் விட்டு விடும் ; கஷ்டமெல்லாம் பட்டு கடைசியில் முடியாது என்று ஒப்புக்கொள்வதைவிட, அக்கஷ்டமெல்லாம் இல்லாமலே இப் பொழுதே தோற்றதாக ஏற்றுக்கொள்ளும், ! நானுவது தோற்றதாக எற்றுக்கொள்வதாவது ? அது முடி யாத காரியம், நீர் உரைத்ததெல்லாம் உண்மையாயிருப்பி லும், இனி முன் வைத்த காலே நான் பின் வாங்க முடியாது. ஆரம்பித்தபின் அனேத்தும் போவதாயினும் அதை முடிப்ப தென்னும் முயற்சியினின்றும் பின் வாங்குபவன்ாான் அல்ல! ஆம் ஆம்! நீர் சத்ரியராகப் பிறந்தீர் என்பதை மறந்தேன். உம்முடன் பிறந்த குணம் உம்மை விட்டகலுமா என்ன ! காாதரே, இவ்வளவுதான நீர் எனக்குச் செய்யத்தக்க உபகா ாம் .அம்மன்னன் வாக்கினின்றும் ஒரு அசத்திய வார்த்தை வரும்படியான மார்க்கம் எனக்கு ஒன்று எடுத்துரைக்கமாட் டீரா? என் மீது பிரியமிருக்குமாயின் ஏதாவது ஒரு சூழ்ச்சி செய்யும், -- இதோ பார்க்கிறேன்-ஆம்-ஒரு யோசனை தோற்றுகிறது. அவனது அரண்மனக்கேசி, ஒர் யாகம் செய்யவேண்டும், அதற்குப் பொன் வேண்டுமென்று கேளும்; தாதாவாகிய அவன் உமது வேண்டுகோளுக்கிசைவான் ; அவன் இசைந்த வுடன், அவன் இல்லை என்று சொல்லும் படியான அவ்வளவு பெரும் நிதியைக்கேளும், அப்படி அந்தக் கஷ்டகிலேக் கவனச் கொண்டுவந்த பிறகு, எதாவது முயற்சி செய்து அவன் அசத்தியம் புகலும்படிச் செய்யலாம்-அது முடியுமான காரிய மால்ை. இந்த மார்க்கத்தை உமக்கு நான் சொன்னபோதி லும்-அதனுடன் இந்த வார்த்தையையும் சொல்லுகிறேன்--

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/13&oldid=726778" இலிருந்து மீள்விக்கப்பட்டது