பக்கம்:Harischandra.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 ஹரிச்சந்திரன் |அங்கம்-1 காதா, ஆதித்யன்போல் தாம் தமது அழகிய சிம்மாசனத்தில் விற்றிருந்தபொழுது, கால சர்ப்பமொன்று தம்மைக் கட்டிப் பிடித்து தம்மை அதினின்றும் கீழே தள்ளியதாகக் கனவு கண்டேன் முதலில்; பிறகு அதன் உடலால் உம்மை கன்முய்ச் சுற்றிக்கொள்ள, அதினின்றும் விடுவித்துக்கொள்ள வகை யறியாது பல துயரம் தாம் அனுபவிப்பதைப் பார்த்ததாகக் கண்டேன் ; கடைசியில் தாம் அக் கடும்பாம்பின் தலையை நசுக்கிக் கொன்று அதன் கட்டினின்றும் விடுவித்துக் கொண்டதாகக் கனவு கண்டேன். பிராணநாதா கனவிற் கண்ட பாம்பாயினும், அதைக் குறித்து எண்ணும்போதெல் ல்ாம் என் நெஞ்சம் பகீர் என்கிறதே ! கடைத்தேறும் மார்க்கம் இருக்கிறது போலும் !-உமை பாகா ! எல்லாம் உமது போருளாகும் கடையவர்களாகிய எம்மைக் காப்பது தம்முடைய கடமையன்ருே அளவற்ற தமது ஆற்றலுக்குமுன் அற்பர்களாகிய நாங்கள் எவ் வளவு ?-தாம் விட்டதே வழி ! பிராணநாதா ! என்ன தாம் யோசித்துக்கொண் டிருக்கிறீர்? இக் கனவு, இனி உமக்கு நேரிடப்போகிற ஏதாவது கெடுதி யைக் குறிக்கிறதென எண்ணுகிறீரா என்ன ? சந்திரமதி, உலகத்தில் நமக்கென்ன நேர்ந்தபோதிலும் உமை கேள்வரது திருவுளமாகுமது என உறுதியாய் கம்பியிருத்தல் வேண்டும்; அவான்றி அகிலத்திலும் ஒர் அணுவும் அசையாது. ஆகவே யாதும் அவர் பாரமென்று அவரது உள்ளத்திற்கு உட்பட்டு கடக்கவேண்டியது நமது கடன்-கண்மணி, நானும் கண் விழிக்குமுன் கடுங் கனவொன்று கண்டேன். இருவரும், ஏக காலத்தில் கடுமையான கனவு கண்டது, நமக்கு நேரிடப் போகிற ஏதோ கெடுதியைக் குறிக்கிறது போலும். ஆகவே அக் கண்டத்தினின்றும் கடவுள் கை கொடுத்து நம்மைக் கரையேற்றும்படி பிரார்த்திப்போம். பிராணநாதா தாங்களும் கனவு கண்டிாா ? அது இன்ன தென்று அடியாள் அறிய விரும்புகிறேன். நான் கண்டதைப் போல் அத்தன கோரமானதா பல்லா திருக்குமாக !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/16&oldid=726781" இலிருந்து மீள்விக்கப்பட்டது