பக்கம்:Harischandra.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 ஹரிச்சந்திரன் (அங்கம்.1 மற்ருெரு மந்திரி. (ஒருபுறமாக உம்முடைய மனதில் சந்தேகம் உதிக் காத காலம் எது ? சத்யகீர்த்தி விஸ்வாமித்திா ைஅழைத்து வருகிமுர். ஹ. (அவர் பாதத்தில் நமஸ்கரித்து) விஸ்வாமித்திர மஹரிஷி ! அடி யேன் ஹரிச்சந்திரன் நமஸ் கரிக்கின்றேன். வி. [ஆசீர்வதிக்கிருர்) திருசக்குவின் மைந்தா ஹரிச்சந்திரா ! எழுந்திரு, சிரஞ்சீவோபவ ! உனக்கு எல்லா மங்களமும் உண்டாகுமாக. ஹ. (எழுந்து அர்க்கியபாத்யாதிகளைக் கொடுத்து) ஸ்வாமின், மஹரிஷி, இந்த ஆசனத்தில் எழுந்தருளியிருக்கவேண்டும். இன்றைத் தினம் நான் எழுந்த வேளை நல்ல வேளை தங்களுடைய சீர் தங்கிய பாதங்களிற் பணிந்து என்னேக் கிாதார்த்தகைச் செய் தது; தங்கள் பாததுாளிபட்டு இவ்வரண்மனே புனிதமாயிற்று, இந்நாடு நன்னடாயிற்று. வி. ஹரிச்சந்திரா, யுேம் உன்னுடும் rேமந்தான ? - ஹ. ஸ்வாமின், எம்பெருமான் அருளாலும் தங்களைப் போன்ற தவ சிரேஷ்டர்களுடைய கடாட்சத்திலுைம் சேதமமாயிருக் கிருேம்-முனியுங்கவாே, தாங்கள் இவ்வளவு தூரம் நாயேனே நாடி வந்ததெக்காாணமோ விலவேண்டும். ஆக்கினேயை கிறைவேற்ற அடியேன் காத்திருக்கிறேன். வி. வேறு விசேஷ மொன்று மில்லை. ஹரிச்சந்திரா, கான் ஒரு யாகம் இயற்ற எண்ணியிருக்கிறேன், அதற்கு உன்னுடைய உதவி கொஞ்சம் வேண்டியிருக்கிறது. அதற்காகவே இவ் விடம் வந்தேன். ஹ. ஸ்வாமி, அதைக் கேள்வியுற்று ஆகந்த பரவசனனேன் அடி யேனை ஒரு பொருளாக வெண்ணித் தாம் இங்கடைந்தது எனது முன்னேர்கள் செய்த பூஜாபலனே என்று கினேக்கி றேன். மஹரிஷி, தாம் இயற்ற எண்ணிய யாகத்திற்கு என் ல்ை எவ்விதத்தில் உதவி புரியக்கூடம் என்று தெரிவித்தால், உடனே என்னுலியன்ற அளவு தம்முடைய ஆக்கினயை சிர சாவஹித்து அதை ஈடேற்றச் சித்தமா யிருக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/20&oldid=726785" இலிருந்து மீள்விக்கப்பட்டது