பக்கம்:Harischandra.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ாட்சி.1) ஹரிச்சந்திான் 17 ഉും சத்யகீர்த்தி, அவர்களை விசாரித் தறிந்தாயா அவர்கள் குறை என்னவென்று ? சத். அண்ணலே, நமது தேசத் தெல்லையில் வசிக்கும் சிலர், தங்க ளுடைய பயிர் பச்சைகளெல்லாம் காட்டு மிருகங்களால் நஷ் டமடைகிறதாக முறையிடுகின்றனர்; அன்றியும் தாங்கள் வேட்டைக்குப் புறப்பட்டு அத் துஷ்ட மிருகங்களை யெல்லாம் அழிக்கவேண்டுமென்றும் வேண்டுகின்றனர். ஹ. அங்ஙனமே செய்வோம் உடனே. மன்னுயிரையெல்லாம் தன் னுயிரைப்போல் பாது காப்பது மன்னவன் முதற் கடமை யன்ருே உடனே நமது வேடர்கள் வில்லியர்களை யெல்லாம் சித்தமாகச் சொல். இவ்விஷயத்தில் தாமதம் என்பது பி.டfது. [போகிரு.ர்கள்.) காட்சி முடிகிறது.

              • exعaaxجميمهu--ow

இரண்டாம் அங்கம் முதற் காட்சி. இடம்-அயோத்தியை அடுத்த ஒரு வனம், ஹரிச்சந்திான், சத்யகீர்த்தி, பிாதான், சில வேடர்கள் - புடைசூழ வருகின்றனர். ஹ. இதனுடன் இன்றைத்தினம் வேட்டையை நிறுத்துவோம்; இவ்விடம் தங்குவோம் இப் பகல். பிரதான், கூடாரத்தைகூடிய சீக்கிரத்தில் அடிக்கச் சொல் ஒரு புறமாக; அதோ அப்பக்கம் யாரோ மஹரிஷி ஆஸ்ரமம்போல் காண்கிறது. நம்முடைய பரிவாாங்களெல்லாம் அதனருகிற் சென்று அங்குள்ள வர்களுக்கு இன்னல் விளக்காதபடி பார்த்துக்கொள்ளும். ኢና፡ சித்தப்படி மஹாராஜா. (வேடர்களை அழைத்துக்கொண்டு ஒருபுறம் போகிருன்.) சத் அண்ணலே, இவ்வழகிய பசும்புற் றரைமீது அரை நாழிகை பள்ளிகொண்டு இளைப்பாறும். காலை முதல் நடத்திய கடும் வேட்டையினுல் மிகவும் களைப்புற் றிருக்கிறீர்கள். ஹ. சத்யகீர்த்தி, என் உடம்பு தளர்வெய்தி யிருக்கிறது உண் மையே. ஆயினும், வேட்டையில் எனக்குள்ள உற்சாகம் 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/23&oldid=726788" இலிருந்து மீள்விக்கப்பட்டது