பக்கம்:Harischandra.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 - ஹரிச்சந்திரன் (அங்கம்-2 ஹ. சத்யகீர்த்தி ! இதோ பார் ! எனது இடதுதோள் துடிக் கிறது ஏதோ எனக்கு விரைவில் தீங்கு நேரிடும்போலத் தோற்றுகிறது. சத், ஈசன் கருணையினுல் அங்கனம் இல்லாதிருக்குமாக அண் னலே, நாம் இவ்விடம் விட்டுப் போவோம். இங்கு வந்தது முதல் என் மனம் ஒருவாழுய்த்தான் இருக்கிறது. ஹ. அப்பா, அதில் என்ன பிரயோஜனம் ? நமது விதியை விட்டு விலகிப் போகக் கூடுமா நம்மால் ? உனது கிழலை விட்டு ஒடிப் போக முடியுமோ உன்னல் ஆகவே, வருவது எங்கிருந்தாலும் வந்துதான் தீரும் விஸ்வாமித்திார் கன்னியர்கள் பின் தொடர விரைந்து வருகிருர். வி. (மிகுந்த கோபத்துடன் அடே! ஹரிச்சந்திரா ! என்ன காரியம் செய்தாய் நீ இதுவோ உனக்கடுத்த திே ? இதுவோ உன் ராஜ தர்மம் இதுவோ நீ செங்கோல் நடத்தும் முறைமை? அரசன் அன்ருெறுத்தால் தெய்வம் கின்ருெறுக்கும் என்பதை மறந்தனையா? தெய்வம் ஒன்றிருக்கிறது, என்று, அதற்கு அஞ்சாவிட்டாலும், நான் ஒருவன் இருக்கிறேன், என்று கொஞ்சமாயினும் உனக்கு பயமில்லாமற் போச்சுதா ? ഉു. (அவர் பாதக் தில் பணித்து) தவசிரேஷ்டரே! தாங்கள் இவ்வாறு கோபித்துக் கொள்ளும்படியாகத் தமியேன் செய்த குற்றம் இன்னதென்று அறிகிலேன். நான் செய்த அபராதம் இன்ன தென்று திருவாய் மலர்ந்தருளவேண்டும். அதற்குத் தக்கப் பிராயச் சித்தம் செய்கிறேன் விரைவிற் கூறும்படி வேண்டு கிறேன். * வி. அடே ஹரிச்சந்திரா ! இக்கன்னிகைகள் யாரென்று தெரியு மா ? எனது ஆச்சிரமத்தில் வசிக்கும் பெண்கள் இவர்கள், சற்று முன்பாக உன்னெதிரில் தாங்கள் கற்ற வித்தைகளைக் காட்ட, அதைக்கண்டு களித்தும், அவர்கள் கோரும்படியான தைக் கொடேன் என்று கூறியதுண்மைதான ? ஹ. உத்தமரே, உண்மைதான். ஆயினும், அவர்கள் கேட்டதை தர்மப்படிக் கொடுக்க கான் அசத்தன யிருக்கிறேன். ஆகவே, தாங்கள் என்ன மன்னித்தருளவேண்டும். அவர்கள் அந்தஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/28&oldid=726793" இலிருந்து மீள்விக்கப்பட்டது