பக்கம்:Harischandra.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) ஹரிச்சந்திரன் 23 திற்குத் தக்கபடியும், எனது தர்மத்திற்குத் தக்கபடியும், நான் அவர்களுக்குக் கொடுக்கத்தக்க எதையாவது தாம் குறிப் பிட்டால், கொடுக்கச் சித்தமா யிருக்கிறேன். தாங்கள் சற்று கருணை கர வேண்டும். வி. கோபம் பற்றி எரியும்பொழுது கருண கூர்வதாவது! இப் படித்தானே உனது ராஜ்யத்தை பரிபாலனம் செய்துகொண்டு வந்தாய்! மன்னர்கள் மன்னணுயிருக்கப்பட்ட ,ே உன்னே நாடி வந்து உனது மனத்தைச் சந்தோஷிப்பித்த கன்னி யர்கள் கேட்கும் வாத்தைக் கொடுக்க அசக்தனுயிருக் கிறேன் என்கிருயா? எதாயிருந்தபோதிலும், இட்சணம் அவர்கள் வேண்டுகோளுக்கினங்குவாய், இல்லாவிட்டால் என் கொடிய சாபத்திற்காளாவாய்! ஹ. முனிசிரேஷ்டரே, தாங்கள் விணில் என்மீது முனியலாகாது, அவர்கள் விரும்பிய இரண்டையும் கொடுக்க நான் அசக்தனு யிருக்கிறேன். நானே க்ஷத்ரிய குலத்துதித்த அரசன், அன்றி யும் ஏகபத்ணி விரதம் பூண்டவன். ஆகவே என்னே மன்னிக் கும்படி வேண்டுகிறேன். வி. அடே ஹரிச்சந்திரா என் கட்டளையை மீறப் பார்க்கிருயா ? - நான் யாரென்பதை மறந்து பேசுகிருயா? உன்னுடைய தந்தை யாகிய திரிசங்குவிற்குப் புதிய சுவர்க்கமொன்றை உண்டு பண்ணிய ஆற்றலுடையவன் நான் என்பது உனக்கு ஞாபக மில்லையோ? திரிலோகங்களையும் அரை கணத்தில் பஸ்மீகரப் படுத்தும்படியான சக்தியுடையவன் விஸ்வாமித்திரன் என்ப தை எண்ணினு யில்லை போலும் கோபத்தில் ருத்திரன் குரு விஸ்வாமித்திரன், என்னும் மொழியைக் கேட்டதில்லையோ நீ ? மும்மூர்த்திகளையும் ஏவல் கொள்ளத்தக்க வன்மையுடைய எனக்கு கேவலம் நீ எம்மாத்திரம் ? நான் பன்முற்ை கேளே னினி ! இதுவே என் கடைசி வார்த்தை. இவர்கள் வேண்டு தோளுக் கிசைந்து இவர்களை மணம் புரிகிருயா? அல்லது எனது கொடிய சாபத்தைப் பெறுகிருயா? ஹ, ஸ்வாமி, கான் சக்தியத்தையே விரதமாகப் பூண்டவன், எக பத்ணி விரதத்தை எடுத்துக்கொண்ட பிறகு மற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/29&oldid=726794" இலிருந்து மீள்விக்கப்பட்டது