பக்கம்:Harischandra.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.1) ஹரிச்சந்திரன் 25 பெரிதோ ? நான் கொடுப்பது கஷ்டமல்ல, தாங்கள் கேட்பது கஷ்டம் காலம் கழிந்து, உமது மனம் மாறி நீர் வேண்டா மென்ருல், இப்பெரும் புண்ணியம் எனக்குக் கிட்டாமற் போகுமே ஆகவே இந்த கணமே பெற்றுக்கொள்ள வேண் டும். (ஒரு புறமாக என்ன ஆச்சரியம்! கொஞ்சமாவது முகம் கோணுது சொல்கிருனே -அப்பா, ஹரிச்சந்திரா, ஏதோ அவசரப்பட்டுக் கொடுத்துவிட்டதாக அப்புறம் துக்கப்படப் போகிருய், தானம் கொடுப்பதென்ருல் மன மொப்பிக் கொடுப் பதுதான் தானமாகும். ஆகவே யோசித்துச் செய்யவேண்டு மெதையும், இல்லாவிட்டால் கவலைக் கிடங் கொடுக்கும் பிறகு, ஸ்வாமி, நான் கவலைப்படுவதெல்லாம், எங்கு தாம் யோசித்து, இது வேண்டாமென்று வெறுக்கிறீரோ என்பதே ! பிறகு, எங்கு சத்பாத்திரமாகிய தங்களுக்கு இப்படிப்பட்ட தானத் தைக் கொடுக்கும் புண்ணியம் எனக்குக்கிட்டாமற்போகிறதோ, என்றே ஏங்குகிறேன். (ஒரு புறமாக) என்ன ஆச்சரியம்! நாம் அவனேக் கொடுக்கும் படி வற்புறுத்துவதை விட்டு, வாங்கிக் கொள்ளும்படி என்னே யன்ருே அவன் வற்புறுத்துகிருன் 1-ஆனல், ஹரிச்சந்திரா, நாளைத்தினம் உனது அாண்மனேக்கு வந்து அனைவரும் அறிய உன் அரசை தானமாகப் பெறுகிறேன்.-இப்பொழுது ே விடை பெற்றுக் கொள் ; உன் பரிவாரங்களை அழைத்துக் கொண்டு உடனே ஊர் போய்ச் சேர். இங்கு அவர்க ளிருப் பது தபோதனர்களுக் கெல்லாம் பெரும் இடஞ்சலா யிருக்கி றது. மஹரிஷி, கட்டளைப்படியே -இவ் விாாஜ்ய பாரமாகிய பெருஞ் சுமையை என் தோட்களினின்றும் நீக்க இசைந்த உமக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்! தாம் மறவாது நாளை அயோத்திக்கு வந்துசேரவேண்டும். அப்படியே ஆகட்டும். நீ உடனே புறப்படுவாய். |கன்னியர்களை அழைத்துக்கொண்டு போகிருர்) அண்ணலே! நான் கேட்டதெல்லாம் கனவோ ? கினேவோ ? 4.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/31&oldid=726797" இலிருந்து மீள்விக்கப்பட்டது