பக்கம்:Harischandra.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 வி. ஹரிச்சந்திான் |அங்கம்.2 தன்ருே அந்த பொன் நீங்கலாக என்று கூறினுயில்லையே ? ஆகவே ஒரு வஸ்துவை இாண்டு முறை நீ என்னமாகத் தானங் கொடுக்கலாம் ? ஆகவே நீ முன்பு யாகத்திற்காக எனக்குக் கொடுக்க இசைந்த பொருளை என் முன்பு கொணர்ந் துவை, வைத்துவிட்டு அப்பால் அடி எடுத்துவை என்னே இவ்வாறு மோசம் செய்யலாமென்ரு எண்ணினுய் அடே ! ஹரிச்சந்திரா ! ஸ்வாமி, இதைப்பற்றி நான் இவ்வாறு யோசிக்கவில்லை. நீ யோசித்தாலென்ன யோசிக்கா விட்டாலென்ன ? எனக்க தன. லாவதொன் றில்லை. நீ அன்றைத்தினம் நான் குறிப் பிட்ட பொன்னே எனக்குக் கொடுக்க இசைந்தாயா இல்லையா? இசைந்தது உண்மையே. ஆனல் முன்பு அப்பொருளைக் கொண்டுவந்து கொடுத்து விட் டுப்போ-கீ அதைக் கொடுக்கவில்லை என்கிருயா ? ஸ்வாமி, என்னுயிருள்ளளவும் அவ்வார்த்தை என் வாயினின் மறும் எப்படி வரும் ? ஆனல் கொடு அப் பொருளே. (ஒரு புறமாக கருணுகிதி என்னேக் காத்தருளும்!-ஸ்வாமி அடியேன்மீது கருணைகூர்ந்து ஏதாவது தக்கபடி தவணை கொடுப்பீராயின் அதற்குள் எக் கஷ்டமாவது பட்டு அப் பொருளைச் சேகரித்து உம்மிடம் ஒப்புவிக்கிறேன். உனக்குத் தவணை கொடுத்தென்ன பிரயோஜனம் ? தவணைக் குள் எப்படி அத்தனை பொருள் சேகரிக்கப்போகிருய் ? எந்த கஷ்டமாவது பட்டு சொன்ன வார்த்தையைக் காப்பாற்று கிறேன். கையில் காசுமில்லாத ,ே அவ்வளவு பொருளைச் சேகரிப்ப தெவ்விதம் ஒரு வேளை பிட்சை யெடுக்கலாம் என்று பார்க் கிருயோ ? அப்படிச் செய்வதாயினும் எனது ராஜ்யத்தின் எல் லேக்குள் செய்யலாகாது. என்னுடைய சாஜ்யத்திலுள்ள பொருளெல்லாம் எனக்குரித்தானது, ஆகவே என் பொரு ளைக்கொண்டே என் கடனே அடைப்பதென்பது அ டாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/36&oldid=726802" இலிருந்து மீள்விக்கப்பட்டது