பக்கம்:Harischandra.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாட்சி-5) தேவ. 摇· ஹரிச்சந்திரன் 39 ஸ்வாமி, அதோ அந்த கிழலில் போய்த் தங்கி கொஞ்சம் இளைப்பாறுவோமா ? அதெல்லாம் முடியாது இந்த இடத்தைவிட்டு நகரமாட் டேன் ; இவ்விடம் எனக்கு சவுக்கியமாகத் தானிருக்கிறது, என்னே இங்கே தனியே விட்டுவிட்டு நீங்கள் எல்லாம் ஒடிப் போகப் பார்க்கிறீர்களா என்ன ? ஸ்வாமி, அப்படிப்பட்ட எண்ணம் அடியேனுக் கொன்று மில்லை. இந்த எனது வேண்டுகோளுக்கு தயைசெய்து இாங்கும். இவள் ஸ்திரீ ஜாதி, இவன் அறியாப் பாலகன், இவர்களால் இச் சுடுகையும் வெப்பமும் தாங்க முடியவில்லை. தாங்க முடியாமற்போன லெனக்கென்ன ? நீ மாத்திரம் சொன்ன சொல் தவறலாகா தென்கிருயே, இவ்விடம் விட்டுப் பெயரமாட்டேன் என்று நான் சொன்ன சொல்லை நான் ஏன் தவறவேண்டும் இவர்களுக்காக ? என் பணத்தைக் கொண்டுவந்து எண்ணி வை இப்படி, கான் எழுந்து வரு கிறேன். அம்மா -அண்ணு -பசி! பசி! Iமூர்ச்சையாகிமூன். பிராணநாதா ! நமது குழந்தை பசியால் மூர்ச்சையானுன் ! கானும் மூர்ச்சையாவேன்போ லிருக்கிறது ! என்னைச் சற்றே தாங்கும்-தாங்கும் ! (ஹரிச்சந்திான் அவளைத் தாக்க விாைகிமுன்) ஹரிச்சந்திரா ! ஹரிச்சந்திரா வா இப்படி வா இப்படி ! என் கால் எல்லாம் சுடுகிறது சுடுகிறது தூக்கு துக்கு என்னை - இதோ வந்தேன் ஸ்வாமி ! (நட்சத்திரேசனிடம் போகிமுன்) என்னுல் எழுந்திருக்கவும் முடியவில்லை, என்னே அப்படியே துர்க்கிக் கொண்டு போய் அந்த நிழலில் வை. என்ன உன் பெண்சாதி பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டு கிற்கிருயே அவர்களுக்குத் தெரியும் அவர்களைப் பாதுகாத்துக் கொள்ள, ஏழைப் பிராம்மணனுகிய என்னேக் காப்பாற்றுவதுதான் உனது முதற் கடன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/45&oldid=726812" இலிருந்து மீள்விக்கப்பட்டது