பக்கம்:Harischandra.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4 ஹரிச்சந்திான் (அங்கம்-2 யார் வேண்டுமென்ருலும் உணவு கொடுப்பார்கள்; அநாதை யான எனக்கு யார் கொடுப்பார்கள் ? இந்தா, இதில் கொஞ் சம் தண்ணீர் இருக்கிறது. அதைக் குடித்து களை தீரச் சொல் -அடுக்குப்பயல் என்ன பேசினன் முன்பு ? &F。 (அதை வாங்கிக்கொண்டு ஸ்வாமி இவ்வளவாவது தயவு பண்ணினிரே ! (தேவதாசனுக்கு அதைக் கொடுக்கப் போகிமுள்.) 翻· அடடா கொண்டுவா இப்படி கொண்டுவா இப்படி அந்த ஜலத்தை என் கைகளைக்கழுவ மறந்து போனேன், கொடு கொடு இப்படி! (அர்த ஜலத்தை வாங்கித் தன் கைகளைக் க்ழுவிக் கொள்ளுகிருன்.) தேவ. அண்ணு -என்ன பேராசை பிடித்த பிராம்மணன் ! 8, ஸ் ! ஸ் -கண்ணே ! அப்படியெல்லாம் வெளியிற் சொல் லாதே! 翻, அப்பா ! -இப்பொழுதெல்லாம் சரியாகிவிட்டது-கோமாகி றது, புறப்படுவோம் வாருங்கள். இருட்டு முன் காசிப்பட்ட ணம் போய்ச் சேரவேண்டும். புறப்படுங்கள் புறப்படுங்கள் ! க. ஈசனே 1 ஜகதீசா ! (கண்ணிர் விடுகிருள்.) ஹ. பரமேஸ்வரா பரமேஸ்வரா எந்த ஜன்மத்தில், என்ன பாப மிழைத்தோம் நாங்கள் இக்கதியடைவதற்கு நான் செய்த பாபமே என் மனைவி மக்களைப் பீடிக்கிறதோ ? இருக்கட்டும்! உம்முடைய திருவுளப்படியே நடப்பதெல்லாம் நடக்கட்டும். இன்னும் எம்மை எக்கோலம் கண்டபோதிலும் உமது பாதாா விந்தங்களை விடப்போகிறதில்லை ! 需。 தோபார் ஹரிச்சந்திரா ! இவ்வளவு கஷ்டமும் வருவித்துக் கொண்டதே இப்பொழுதும் என்ன கெட்டுப்போச்சுது ? உன்னுல் கொடுக்க முடியாது என்று ஒரு வார்த்தை சொல், நான் உடனே உங்களை விட்டுப் போய் விடுகிறேன்; உன் மனைவி மக்களுடன் நீ எங்கேயாவது போய்ச் சுகமாய் வாழலாம.--

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/50&oldid=726818" இலிருந்து மீள்விக்கப்பட்டது