பக்கம்:Harischandra.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 ஹரிச்சந்தி ன் (அங்கம்.3 அந்த காதி மைந்தரிடமிருந்து விடைபெற்றே, வேகமாய் இங்கு உம்மைப்பின் தொடர்ந்தேன். வருகிற வழியில் நீங்கள் காசிக்குப் போனதாகக் கேள்விப்பட்டு இங்கு வந்தேன், உங் களைக் கண்டேன், என் கவலை யொழித்தேன். அப்பா, சத்யகீர்த்தி, அம்மட்டும் நீ எங்களை முன்பே வந்து சந்தியாதது நலமே. முன்பே சந்தித்திருப்பாயாயின் நாங் கள் அனுபவித்த கஷ்டங்களையெல்லாம் யுேம் அனுபவித்திருக் கும்படி நேரிட்டிருக்கும். அதனின்றும் தப்பினயே அம்மட் டும் ஈசனருளால் - அரசே பிராம்மணருக்குக் கொடுக்கவேண்டிய பணம் செலுத் தியாய் விட்டதா ? இல்லை, இன்னும் தீர்க்கவில்லை. ஆயினும் இன்றுபொழுது போவதன் முன் அக்கடனே எப்படியாவது தீர்க்கவேண்டும். அங்கனம் செய்வதாக வாக்களித்திருக்கிறேன்; ஆகவே அப் படிச் செய்தே தீரவேண்டும்; ஆயினும் இப்பெருந் தொகையை அடையும் மார்க்கம் ஒன்றும் தோன்ருதவனுய்த் திகைத்து கிற்கிறேன். இத்தொகையை யார் எனக்கு கடனுகக் கொடுப் பார்கள் ? அப்படிக்கொடுத்தபோதிலும் அதில் என்ன பிர போஜனம் ? முனிவர் கடனினின்றும் நீங்கி மற்ருெருவருக் குக் கடன் பட்டதே யாகுமன்ருே ?-யாசிப்பது சத்ரிய தர்ம மன்று, ஆகவே அதைச் செய்யேன். வேறு நான் என் செய்வது ?-மூவர்க்கு முதலே முத்திக்கரசே! முனிவர்க்கு நான் பட்டுள்ள கடனத் தீர்க்கும் மார்க்கம் ஏதாவதொன்று கடாட்சித்தருளும் கேதி நீாேகி ஹரிச்சத்திரா ! இப்பொழுதாவது என் வார்த்கையைக்கேள். அந்த ஈஸ்வரனுல் உனக்கு உதவிசெய்ய முடியாது-என்னுல் முடியும். ஸ்வாமி, இக் கடனத் தீர்க்கும்படியான மார்க்கம் தமக்கேதா வது தோன்றினல், தயைசெய்து என்னிடம் கூறுங்கள், உமக்கு மிகவும் புண்யமாம். கடனத்தீர்த்து இக்கஷ்டங்களினின்றும் கடைத்தேறும் மார்க்கம் மிகவும் சுலபமானதொன் றிருக்கிறது. அப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/54&oldid=726822" இலிருந்து மீள்விக்கப்பட்டது