பக்கம்:Harischandra.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.() ஹரிச்சந்திரன் 49 சந். பொழுதுதான் கேட்கமாட்டேன் என்ருய், இப்பொழுதாவது கேள் பிராம்மளுேத்தமரே, முன்பு கூறியதைத் தாம் மறுபடியும் கூறுவதானல், தயைசெய்து அதைக் கூருகிரும். அதை நான் கேட்பதும் தர்மமன்று, தாங்கள் எனக்கதைக்கூறுவதும் தர்ம மன்று. அதைவிட, எங்கள் குலத்தில் முற் பிறந்தோணுகிய சிபி சக்ரவர்த்தி ஒரு புருவிற்காகச் செய்தபடி, எனது தேகத் திலுள்ள தசையைத் துண்டம் துண்டமாக்கி விற்ருவது, என் கடனத் தீர்க்கும் மார்க்கத்தைத் தேடுவேன். நான் ! பிராணநாதா, தாங்கள் அவ்வாறு ஒன்றும் கஷ்டப்படவேண் டியதில்லை. அதைவிட சுலபமான மார்க்கம் ஒன்று எனக்குத் தோற்றுகிறது. அதை இதுவரையில் கூருததற்காக என்ன மன்னிக்கவேண்டும். பதிவிரதையின் முக்கியமான கடமை என்னவென்ருல், தன்பதிக்கு ஏதேனும் கஷ்டம் நேரிடுங் கால், தன் உயிரையாவது கொடுத்து அவரை அக்கஷ்டத்தி னின்றும் விடுவிக்கவேண்டியதே; புத்திரனுக்கும் அம்மாதிரி யாகக் கடமை யுண்டு. ஆகவே என்னையும் தேவதாசனேயும் அடிமைகளாக விற்று அப்பணத்தைக் கொண்டு முனிவர் கட னேத் தீர்த்துவிடும். * என்ன ! நான் கனவு காண்கிறேன என்ன? சந்திாமதி, என்ன சொன்குய்? உங்களிருவரையும் விற்பதா? உன்னேயும்-தேவ தாசனயும்-நான் விற்கவா ?-பாமனே! பாமனே! உமது பாதாரவிந்தங்களை மறவாது பக்தனுய்த் தொழுது வந்ததற் குப் பலன் இதுதானே ? என் மனைவி, வாக்கினின்றும் இவ் வார்த்தையைக் கேட்கும்படி அனுக்கிரஹம் செய்திரே! பாவி நான் எந்த ஜன்மத்தில் என்ன பாப மிழைத்தேனே இக் கதி அனுபவிப்பதற்கு ? (கண்ணிர் விடுகிருன்) பிராணகாதா, துக்கப்படாதீர், என்மீது கோபமும் கொள்ள தீர்; நீரே எனக்கு எத்தனை முறை சொல்லி யிருக்கிறீர்கள், மண்ணுலகில், உற்ருர் உறவினர் மனேவி மக்கள் மற்றெச் செல் வமும் சாஸ்வதமல்ல, சத்ய மொன்றே சாஸ்வதமானது, என்று. நாங்கள் எல்லாம் நடுவழியில் நிற்பவர்களே, வேறு 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/55&oldid=726823" இலிருந்து மீள்விக்கப்பட்டது