பக்கம்:Harischandra.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹரிச்சந்திரன் ] 3-شابهة في உலகத்திலும் உம்மை விடாது தொடர்வது அந்த சத்ய மொன்றே; ஆகவே முனிவருக்குத் தாம் கொடுக்க இசைந்த பொருளைக் கொடுத்து, உமது சத்யத்தைக் காப்பாற்றும் பொருட்டு, எங்களை யெல்லாம் துறப்பதும் தர்மமாகும். தர்ம சாஸ்திரங்கள் இங்ங்ணம் ஒருவன் செய்யலாமென்றும் அனு மதி கொடுக்கின்றன. அன்றியும் பிராணநாதா, உமது மனேவி யாகிய எனக்கும், உமது மைந்தணுகிய தேவதாசனுக்கும், உமக்கு நேரிட்ட கஷ்டத்தினின்றும் உம்மை அகற்றி, உமது சத்தியமொழியைக் காப்பாற்றுவதற்கு உதவினுேம் என்கிறதை விட, மேலானபேறு இல்வுலகில் வேறு என்ன கிட்டப் போகி றது? பாவிகளாகிய எங்களுக்கு இந்தப் புண்ணியமாவது கிடைக்கட்டும். எங்கள் கடனே நாங்கள் தீர்க்கிருேம், உமது கடன ர்ே தீரும். சந்திரமதி ! சந்திரமதி ! அதை கினேக்கவும் என் நெஞ்சம் துணியவில்லையே, நான் எவ்வாறு மனமொப்பிச்செய்யத் துணிவேன் பாவி நான் பாவி நான் ! பிராணநாதா, தாங்கள் இவ்வாறு துயரப்படுதல் நியாயமன்று. இதைவிட வேறு வழியில்லே தம்முடைய சத்ய மொழியைக் காப்பதற்கு ஏன் தாமதிக்கிறீர்கள் இதில் அதர்ம மொன்று மில்லையே. இதை நான் சொல்லவேண்டுமா எல்லா முணர்ந்த தங்களுக்கு எங்களுடைய அனுமதி யின்றியே தாங்கள் இதைச் செய்யலாமே. என்னுடைய தந்தையாகிய மதிதய ாஜன் என்னே உமக்கு அக்னி சாட்சியாகத் தாரை வார்த்துக் கொடுத்தபொழுதே, உமக்கு அந்த சுதந்தா முண்டாயிற்றே, அப்படியிருக்க, நானே உங்களை வேண்டும்பொழுது உமக் கென்ன ஆட்சேபனை ? என் வேண்டுகோளுக் கிசைந்து எங் களை விற்பனை செய்துவிடும் விரைவில், பொழுது போகிறது அந்தோ! அந்தோ! அகாதாட்சகா ஆபத்பாந்தவா! அடியேனே இக் கதிக்குக் கொண்டுவந்த விட்டிாே! மன்னர் மன்னர்கள் அறிய, வேள்வித் தீயின்முன் எக் காத்தால் என் மனைவிக்கு மாலையிட்டேனே, அக் காத்தினலேயே, அவளை அனைவரு மறிய அடிமையாக விற்பனை செய்வதோ நான் ! பாவிக் காமே! நீ என்ன பாட மிழைத்தாய் ! என்ன பாபமிழைத்தாய் இச் செய்கைபுரிவதற்கு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/56&oldid=726824" இலிருந்து மீள்விக்கப்பட்டது