பக்கம்:Harischandra.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 ஹரிச்சந்திரன் (அங்கம்-4 தலையில் பிரமன் வரைந்தனனே ? அரசர்க்கரசனகிய அயோத் திமன்னன் புதல்வன புதித்த ,ே அடிமையாய் விற்கப்பட்டு, கட்செவியினல் கடிக்கப்பட்டு, ஆரும் துணையின்றி அநாதை யாய் அருங்கானகத்தில் மடிந்து கிடக்கவேண்டுமென்று, உன் தலையில் எழுதப்பட்டி ருந்ததோ ? கண்ணே மைந்தா ! இது அறியாப் பாலகனகிய நீ இழைத்த பாபத்தின் பயனன்று, தர்ம சொரூபியாகிய உன் தந்தை யிழைத்த தவறுமன்று ! மஹா பாபிஷ்டியாகிய உன் மாதாவான என் உதாத்தில் உதித்த பாபமே உன்னே இவ்வாறு பற்றியது கண்ணே ! தேவதாசா ! உன் கனிவாய் திறந்து ஒரு வார்த்தை கூறி, இக் காதகியின் கவலையையெல்லாம் போக்கமாட்டாயா? மைந்தா ! மைந்தா ! உன் மாதாபடும் துயரத்தைப் பார்த்துக்கொண்டு சும்மாயிருக்கலாமா நீ இக் கடுங் கானகத்தில் நமது தாய் கதறியழுது தவிக்கின்ருளே யென்று உன் மனம் கரையவில் லையா? கண்ணே கண்ணே எனக்கு ஒரு வார்த்தை கூறடா! ஒரு உறுதி மொழி சொல்லடா ! என்மீது உனக்கு இரக்க மென்பதில்லாமற் போயிற்ரு ? அல்லது நம்மை இக்கதியில் கண்டும் உயிருடனிருக்கிற இக் கடின சித்தமுடைய காதகியு டன் பேசுவது பாபமென்றெண்ணி வாளாயிருக்கின்றனயோ? அப்பா, கண்மணி, உனதன்னே யென்ற பெயர் வைத்துக் கொண்டிருக்கும் இம்மஹா பாதகிக்கு, மரிக்கவும் சுதந்தாமில் லேயே அயலாருக்கு அடிமைப்பட்ட நான் என திச்சைப்படி உயிர் துறக்கவும் சுதந்தரமற்றவளே. -அகாதரட்சகா ஆபத் பாந்தவா பேரிடியொன்றை இப்பெரும் பாவியின் தலையில் விழச்செய்து இவளை பஸ்மீக்கரப்படுத்துமே இட்சணம் ! பாலனப் பறிகொடுத்த பாபி இப்பாரினில் இருக்தென்ன பலன் ஜகதீசா ! இதுவரையில் எனக்கு நேரிட்ட துன்பங் களே யெல்லாம் எனது கணவர் பொருட்டும் என் அருமை மைந்தன் பொருட்டும், பொறுத்து வந்தேன். இனி என் அருமைக் கண்மணி மடிந்தபின், நான் ஆருயிர் தரிப்பா னேன்?-ஐயோ ! என் பாலனக் கடித்த படு விஷமுடைப் பாம்பே, நீ எங்கிருக்கிருய் ஒரு பாபமும் அறியாத அவனக் கொன்ற ,ே மஹா பாயிஷ்டியாகிய என்னேயும் கடித்து மரிக் கச் செய்யாயா? அப்படியாவது இத் தயாமெல்லாம் நீங்கி, சுவர்க்கம் போய் என் சுந்தா குமாானக்கண்டு கட்டியனதுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/78&oldid=726848" இலிருந்து மீள்விக்கப்பட்டது