பக்கம்:Harischandra.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 சத். ஹரிச்சந்திரன் (அங்கம்.4 யிருக்கிறேன்?. கடல் சூழ்ந்த இவ்வுலகில் ஒவ்வொருவனும் தனது கர்மாவைத் தானே அனுபவித்தத் தீரவேண்டும். ஆகவே, எனது கர்ம பலன் இதுபோலும்; இதை நான் அனு பவித்தே கழிக்கவேண்டும். ஆகவே இந்த ஸ்திதியிலும், நமது கர்மமாகிய கடனைச் சீக்கிாம் கழித்தொழிக்கிருேமே என்று சந்தோஷப் படுகிறேன். அண்ணலே, ஈசன் கருணையினுல் இம்மன உறுதி, உம்முடைய மனேவி மக்களுக்கு மிருந்து அவர்களுடைய தற்கால ஸ்திதி யைப் பொறுத்திடும்படிச் செய்யுமாக ! தேவதேவன் அங்கனம் திருவுளம் வைப்பாசாக ! ஒரு புறமாக சந்திரமதி, தேவதாசனைத் தாக்கிக்கொண்டு அழுத வண்ணம் வருகிருள். ஹா கண்மணி ! கண்மணி! நான் இறந்து நீ எனக்குச் செய்யவேண்டிய கர்மத்தை நீ இறந்து கான் உனக்குச் செய்யவேண்டி வந்ததே விதியே விதியே! இப்படியும் எங்களிருவர் தலையில் எழுதி வைத்தியே!-நேரமாய் விட் டது , இனி தாமக்கலாகாது; கட்டையை அடுக்கி, என் கண் மணியை அதில் வளர்த்தி, கான் விரைவில் தகனம் செய்ய வேண்டும்-சிதறிக்கிடக்கும் இவைகளைக்கொண்டு சிதையை அடுக்குகிறேன். (அங்ஙனமே செய்கிருள்.) என் அருஞ்செல்வமே ! உன் அழகிய முகத்தைக் கடைசி முறை உன் தந்தை பார்ப்பதற் கில்லாமற் போச்சுதே தெய் இ,ே தெய்வமே 1-இனி வருந்தியாவதென் ?-அப்பா ! கண்மணி இதோ உன் சிதைக்கும் என் வயிற்றிற்கும் ஒரே கொள்ளியாக வைக்கிறேனடா கண்ணே கண்ணே ! (கொள்ளி வைக்கிருள்.) அப்பா, சத்யகீர்த்தி-அதோ பார், துரத்தில் வெளிச்சம் தெரிகிறது ! யாரோ சிதை யடுக்கிக் கொள்ளி வைக்கிருற் போலிருக்கிறது!-இங்கு சற்றே இரு, நான் போய் என்ன வென்று பார்த்து. வருகிறேன்- - (சந்திரமதி இருக்குமிடம் போகிருன்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/84&oldid=726855" இலிருந்து மீள்விக்கப்பட்டது