பக்கம்:Harischandra.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 ஹரிச்சந்திரன் (அங்கம்.4 மைந்தனே இங்கே தகனம் செய்ய நான் உத்தரவு கொடுக்கக் கூடாது; ஆகவே, அம்மா, நீ என்னே மன்னிக்கவேனும், என் கடமையை நான் செய்யவேண்டும்; உன் கையில் காசில்லா விட்டால், இப் பிரேதத்தை இங்கு தகனம் செய்யக்கூடாது. வேறே எங்கேயாவது கொண்டுபோ. ஐயோ! நான் வேறே எங்கு கொண்டு போவேன் இந் நடு கிசியில் அன்றியும் சிதையின்மீது வைத்ததை மறுபடி எடுக்கலாகுமோ? கொள்ளியும் வைத்தாய் விட்டதே இனி நான் சவத்தைத் தீண்டலாகாகே ! ஐயா, கொஞ்சம் தயை புரியுமே? கொஞ்சம் பச்சாதாபப் படுங்கள் உம்மைக் கை யிாந்து வேண்டுகிறேன்! கொஞ்சம் பொறுங்கள், தகனமாய் விடும் ! அம்மா அது உதவாது இது தான் என் கடைசி வார்த்தை யோக இப்பிரதேசத்தைச் சிதையினின்றும் எடுத்துக்கொண்டு செல்லாவிட்டால், நான் அதைத் தள்ளவேண்டும். என்ன சொல்லுகிருய் ?-சரி என் கடமையை நான் செய்ய வேண்டும்--மன்னிப்பாய் ! (தன் கோலால் தேவதாசன் உடலை எரிகின்ற சிதையினின்றும் தள்ளுகிருன்; அது சந்திரமதியின் மடிமீது விழுகிறது.) தெய்வமே தெய்வமே !-மகனே இப்படியும் இருந்ததா உன் விதி சுட்டெரிக்கப் படுமுன் சுடுகாட்டுப் புலேயனுல் கிதையினின்றும் கீழே தள்ளப்படும்படியாக என்ன பாப மிழைத்தாயடா கண்மணி !ே நீ ஒரு பாபமுமிழைத்திருக்க மாட்டாய்-இக்கதி உனக்கு வாய்த்தது என் வயிற்றில் நீ பிறந்த கொடுமையாகும் ! அக்தோ பாபம்! பாபம் !--அம்மா, என்ன, எவ்வளவு சொல்லியும் அழுதுகொண்டிருக்கிருய் இங்கேயே இந்தக் கதியில் நான் அழாமல் வேறு என்ன செய்வது? இறந்த என் மைந்தனுக்காக நான் கொடுக்கத் தக்கது, என் கண்ணிான்றி வேருென்றும் என்னிடம் இல்லையே அம்மா, என்னே வெறுக்காதே நான் என்ன செய்வேன்? - • . . . . . . . e o – ", , , , , " . . so * உன் கதியை நினைத்து நான் பச்சாதாபப் பட்டபோதிலும், என் கடமையை நான் கிறைவேற்றவேண்டும், எனக்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/86&oldid=726857" இலிருந்து மீள்விக்கப்பட்டது