பக்கம்:Harischandra.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 சத். ஹரிச்சந்திரன் (அங்கம்.4 தீர்? உமது சுபாவமே மாறியதா என்ன ?-ஆ இதுவோ உடல் ? ஆம்.-- (தேவதாசன் முகத்தை மூடியிருந்த வஸ்திரத்தை நீக்கி ஹா தேவ தாசா தேவதாச ! (அழுகிருன். அப்பா அருமைப் பாலகா இப்படியும் அயன் உனக்கு விதித்தானே ? நீ பிறந்தக்கால், உன் தந்தைக்குப் பிற்காலம் அயோத்தியை நெடுநாள் அரசாள்வாய் என்று ஜோன் யர்க ளெல்லாம் அன்று கூறினதெல்லாம் பொய்த்ததே பொய்த் ததே! இப் பாழுலகில் இனி நான் எதைத் தான் நம்புவேன் ? கடவுளே கடின சித்தமுடையவரானல், கருணை யென்பது எங்கு கிடைக்கப்போகிறது இவ்வுலகத்தில் அயோத்தி மன் னன் அருமைப் பாலனுயுதித்த .ே அநாதையைப் போல் அருங் கானில் அரவம் தீண்டி மடிந்து கிடக்க நேர்ந்ததே -தெய் வமே தெய்வமே ! . . சத்யகீர்த்தி, வருந்துதலொழி, நீ ஏன் துக்கப்படுகிருய் ! யாருக்காக துக்கப்படுகிருய் தேவதாசன் உயிருக்காகவா ? அது இருக்கவேண்டிய இடத்தில் சவுக்கியமாயிருக்கிறது. இந்த மண்னுக்காகவா ? மண் மண்ணுேகி போய்ச் சேர்கிறது. எங்களுக்காகவா ? நீ துக்கப்படுவதினுல் எங்களுக்கேதாவது பிரயோஜனமுண்டோ அதனுல் உனக்காகவா ? நீ என்ன பலன் அடையப்போகிருய் இதல்ை?-ஆகவே நீ ஏன் வருந்த வேண்டும் ? அண்ணலே, நீர் கூறுவதெல்லாம் உண்மையாயினும்-என் மனம் கேளேன் என்கிறதே ! அதைக் கேட்கும்படிச் செய்ய, ஈசனக் குறித்துப் பிரார்த்தி, நம்மை இக் கதிக்குக் கொண்டுவந்த ஈசனையா ? அண்ணலே. உமக்கு இம்மனே உறுதி எங்ங்னம் வந்தது ? அவர் கருணேயினுல்-வா. இவ்வுடலே எடுத்துக்கொண்டு நான் காவல் காத்து நிற்குமிடம் செல்வோம். காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/92&oldid=726864" இலிருந்து மீள்விக்கப்பட்டது