பக்கம்:Harischandra.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 . Ufff, ஹரிச்சந்திரன் (அங்கம்-5 வாடா சோம்பேறி ! அப்படி செய்யாதா இருந்தாலும் ராஜா பிள்ளைக்கு என்ன வழி சொல்ாது? பொறப்படுங்கடா சீக்கிரம், இப்படி பேசிகினு இருந்தோ மிண்ணு, அந்த திருடன் பட்டணத்தெ வுட்டு போாத்துக்கு வழி கொடுப்போம். ஏண்டா, வர்ாைங்களா இல்லையா ?-- இல்லாப்போனு நான் மாத்திரம் போயி தேடாேன் - இல்லெ இல்லெ வர்ரோம் நாங்களும் (மூவரும் போகிருர்கள்.) விஸ்வாமித்திார் ஒருபுறமாக வருகிருர், இதனுடன் இப் பிரயத்னத்தை விடலாமா? இன்னும் முயல் வதில் ஏதேனும் பிரயோஜனமுண்டோ? என்னுலான சூழ்ச்சி களெல்லாம் இதுவரையில் நான் செய்து பார்த்தும், அவை களுக்கெல்லாம் இடங்கொடாது, தன் சத்யமொழியைக் காப்பாற்றும்பொருட்டு, தானமாக ராஜ்ய முழுவதையும் கொடுத்து, தன் மனைவி மக்களை அடிமைகளாக விற்று, தானும் ஒரு புலேயனுக் கடிமைப்பட்ட ஹரிச்தந்திரன், இனி எதன்பொருட்டு, அசத்யம் பேசப்போகிருன்சி நான் தோற்ற வனே! ஆயினும் எப்படி அப்பதம் என்வாயினின்றும் வருவது என்றே கவலைப்படுகிறேன்--வேறு வழியில்லே ஆயினும் ஒரு விதத்தில் யோசிக்குமிடத்து இதற்காக நான் வருத்தப்பட வேண்டியதில்லை. வசிஷ்டருக்கும் எனக்கும் நேரிட்ட இவ் வாக்கு வாதத்தில்ை, நான் இது வரையில் அறியாத சில அரிய விஷயங்களை அறிந்தேன். முக்கியமாக கேவலம் இல் லறத்திலிருக்கும் மனிதனுயினும், சத்ய விரதத்தை மேற் கொண்டு அதனின்றும் அணுவளவேனும் பிரியாதவன், இப் பூமண்டலத்தில் ஒருவனிருக்கிருன், என்பதைக் கண்டறிக் தேன். அதுவும் அப்படிப்பட்ட உத்தமன் யார்?-என் சிஷ்யனுகிய திரிசங்குவின் மைந்தன்!-ஆம்-ஹரிச்சந்திரா, உன்னல் உலக மாந்தர்க்கே ஒர் கீர்த்தி யுண்டாயிருக்கிறது. உன்னிடமிருந்து பல அரிய விஷயங்களை அறிந்தேன் நான் ; என்ன வென்றது நீயே அந்த வசிஷ்டர் அன்று; இது எனக்கு சந்தோஷமே-ஆயினும் தேவசபையில் நான் வசிஷ்' டருக்குத் தோற்றதாக ஒப்புக்கொள்ள வேண்டியதா யிருக் கிறதே என்று யோசிக்கிறேன். இதன் பொருட்டே, இதனு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/94&oldid=726866" இலிருந்து மீள்விக்கப்பட்டது