பக்கம்:Humorous Essays.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

ஹாஸ்ய வியாசங்கள்

லெல்லாம் நூற்றுக் கணக்காகப் பெரிய மரங்கள் வளர்ந்திருந்தால், இதில் ஆயிரக் கணக்கான புல் முளைத்திருக்கிறது. மற்றப் பூந்தோட்டங்களிலெல்லாம் புலி, சிங்கங்கள் அடைக்கப் பட்டிருந்தால், இந்தத் தோட்டத்தில் ஆயிரக்கணக்கான எறும்புகள் எதேச்சையாகத் திரிகின்றன. நான் ஒரு முறை பார்த்த போது இவ்வளவு பெரிய பார்க்கில், மற்ற பார்க்குகளில் உள்ளது போல் சங்கீதத்திற்கும் ஏன் ஒரு ஏற்பாடும் செய்யவில்லையென்று துக்கப்பட்டேன். மற்றொரு முறை அந்தப் பக்கம் போன போது அக்குறையும் நீங்கியது. ஒரு ஹரிஜனப் பையன் இங்கே உட்கார்ந்து கொண்டு தப்பட்டை அடித்துக் கொண்டிருந்தான்! இந்தப் பார்க்கில் நீங்கள் முக்கியமாய்க் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தப் பார்க்கை விட இந்தப் பார்க்கின் பெயர் எழுதப்பட்டிருக்கும் போர்டு பெரிதாகத் தோன்றுவதேயாம்! போர்டை விட அதில் எழுதப் பட்டிருக்கும் பெயர் பெரியதானது என்று யாராவது சொன்னால் அவர்களுடன் நான் சச்சரவிட மாட்டேன்.

இப்படிப்பட்ட விநோதங்களெல்லாம் இருக்கும் பொழுது சென்னையைப் பற்றி யாா்தான் குறை கூறக் கூடும்?


பத்து ரூபாய் டிக்கட்


இவ்வருஷம் எம்.எஸ்.எம். ரெயில்வே கம்பெனியார் இதுவரை இல்லாதபடி புதிய வழக்கமாய், பத்து ரூபாய்க்கு மூன்றாவது வகுப்பு டிக்கட்டு ஒன்று வாங்கினால், சென்னை முதல் விசாகப்பட்டணம் வரை, ஏறக்குறையத் தொளாயிரம் மைல், டிசம்பர் மாதம் 20-ந் தேதி முதல் ஜனவரி 15-ந் தேதி வரையில், எத்தனை முறை வேண்டுமென்றாலும் பிரயாணம் செய்யலாமென்றும், இடையில் எந்த ஸ்டேஷனில் வேண்டுமென்றாலும் ஏறி இறங்கலாமென்றும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/12&oldid=1352346" இலிருந்து மீள்விக்கப்பட்டது