பக்கம்:Humorous Essays.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஹாஸ்ய வியாசங்கள்

13

எங்கள் ரெயில் அன்று பதினோரு மணிக்குச் சென்னை வந்து சேர்ந்தது-அதாவது சரியான நேரத்திற்கு இரண்டரை மணி நேரம் கழித்து. அதை விட்டு இறங்கும் போது, “”பத்து ரூபாய் டிக்கட்டினால் அடைந்த ஆனந்தம் போதும்; இனி மேல் ரெயில்காரர் இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் தக்கபடி ஏற்பாடு செய்யாவிட்டால் இந்தப் பத்து ரூபாய் டிக்கட்டை இனி வாங்குவதில்லை” என்று தீர்மானித்துக் கொண்டு வீடு போய்ச் சேர்ந்தேன்.


அதிர்வெடியூர் செவிடர்கள் கதை

அதிர்வெடியூர் என்று ஒரு ஊர் உண்டு. அதற்கு இப்பெயர் வாய்ந்ததற்கு ஒரு முக்கியமான காரணம், அவ்வூரிலுள்ளவர் களெல்லாரும் பெரும்பாலார் செவிடர்கள் என்பதாம். அதிர் வெடி போட்டால்தான் அவ்வூரிலுள்ள நல்ல வயது வாய்ந்தவர்களுக்கும் காது கேட்குமாம். அங்குள்ள கிழவர்களுக்கோ கேட்க வேண்டியதில்லை. கோயில் உற்சவங்களில் அதிர் வெடி போட்டால் பக்கத்தில் நின்று கொண்டு, அதிர்வெடி போட்ட புகையைப் பார்த்து "இதென்ன புகைகிறதே" என்று கேட்பார்களாம்!

இப்படிப்பட்ட ஊரில் ஒரு பிராம்மணன் ஒரு ஏரிக்கரையோரம் உட்கார்ந்து கொண்டு மாத்யான்னிகம் (மத்தியானத்தில் செய்ய வேண்டிய மந்திர ஜபம்) செய்து கொண்டிருந்தான். அதற்கருகாமையிலுள்ள பள்ளத்தாக்கில் தன் ஆட்டு மந்தையை மேய்த்துக் கொண்டிருந்த ஒரு செவிட்டு இடையன், மத்யானமாகியும் வழக்கப்படி, தன் தாயார், தனக்குக் கஞ்சி கொண்டு வராதபடியால், பசி அதிகப்பட்டுத் தாளானாகி, வீட்டுக்குப் போய் கஞ்சி குடிக்க விரும்பினவனாய், அது வரையில் தன் மந்தையை யார் பார்த்துக் கொண்டிருப்பது என்று யோசித்தவனாய், சுற்றிப் பார்த்து மாத்தியான்னிகம் செய்து கொண்டிருந்த பிராம்மணனிடம் போய் “ஐயரே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/19&oldid=1352387" இலிருந்து மீள்விக்கப்பட்டது