பக்கம்:Humorous Essays.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஹாஸ்ய வியாசங்கள்

19

போயினர். அப்படி வெளி வந்த வஸ்து நமது ஜவானுடைய பழய அழுக்குத் தலைகுட்டையென்று இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. வேறே எங்கேயாவது வைத்தால் அதை யாராவது திருடிக் கொண்டு போய் விடுவார்களென்று நமது ஜவான், பத்திரமாயிருக்க வேண்டி அதை அந்தக் குடிக்கும் தண்ணீர் ஃபில்டரில், ஒளித்து வைத்தான்!

அந்த அழுக்குத் தலை குட்டையைத் தீண்டிய அசுத்தம் போக அந்த வயித்தியர் ஐந்து நிமிஷம் சோப் போட்டு கை கழுவினதாகச் சொல்லுகிறார்கள்.

அந்த வருஷம் நமது இந்தியன் வயித்தியருக்கு புரொமோஷன் (promotion) கிடைக்கவில்லை. நமது ஜவானுக்கு மாத்திரம் கிடைத்தது-டிஸ்மிசல்!


அசந்தர்ப்பங்கள்

அடியிற்கண்ட அசந்தர்ப்பமான சந்தர்ப்பங்கள் என் மனோ சஞ்சாரத்தினால் நிர்மாணிக்கப்பட்டவைகளல்ல - வாஸ்தவத்தில் என் கண்ணாரக் கண்டதும் காதாரக் கேட்டவைகளுமே.

(1) மொஹரம் பண்டிகையென்பது மஹம்மதியர்களைச் சார்ந்தது; அதிலும் ஷிய்யா (Shiah) வகுப்பினரைச் சேர்ந்தது. இது அவர்களால் மிகவும் துக்ககரமாகக் கொண்டாடப்படுவது. இதில் ஹிந்துக்கள் சேர்வதே ஒரு அசந்தர்ப்பம்; அந்த ஹிந்துக்கள், பஞ்சாக்களை எடுத்துக் கொண்டு போகும் போது நாகசரம் வாசிப்பது, இன்னும் அதிக விசேஷமானதாம். சில வருடங்களுக்கு முன் சில ஹிந்துக்கள் இவ்வாறு மொஹரத்தின் எட்டாம் நாளாகிய “நவாப்பீலி”யன்று, இவ்வாறு பஞ்சாக்களை எடுத்துக் கொண்டு நாகசர வாத்தியத்துடன் ஊர்வலம் வரும் பொழுது, அந்த நாகசரக்காரன் “ராம! நீ சமானமெவ்வறு?” என்னும் தியாகையர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/25&oldid=1352410" இலிருந்து மீள்விக்கப்பட்டது