பக்கம்:Humorous Essays.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

ஹாஸ்ய வியாசங்கள்

கிருதியை வாசித்துக் கொண்டு போனான்! இந்த அசந்தர்ப்பத்தை என்னென்று சொல்வது? (2) சில நாட்களுக்கு முன்பாக எனக்கு ஒரு நாடக விளம்பரம் கிடைத்தது. அதில் அல்லி அர்ஜூனா நாடகத்தை நடத்தப் போகிற விஷயம் கண்டிருந்தது. அதில் அப்துல் காதர் சாயபு அர்ஜுனனாக நடிப்பார் என்று பிரசுரித்திருந்தது. நாடகம் மத சம்பந்தமான நாடகம், நாடக பாத்திரம் பரம சிவபக்தனான அர்ஜுனன், அதை நடிப்பவனோ ஒரு மகம்மதியன்! அந்த ஆக்டர் நன்றாய் நடித்திருக்கலாம், அதைப் பற்றி நான் கூற வரவில்லை. இந்த அசந்தர்ப்பத்தைப் பற்றியே கூற வந்தேன். ஒரு கிருஸ்து மத சம்பந்தமான ஒரு நாடகத்தில வைஷ்ணவ பாகவதர் நடிப்பது எவ்வளவு பொருத்தமின்மையாகும்! (3) மேற்கண்ட அசந்தர்ப்பத்திற்கு சமானமாக வேறொன்றைத்தான் கூறக் கூடும். அது என்னவென்றால், நந்தனார் நாடகத்தில், கறுத்த மேனியையும், செம்பட்டை மயிரையும், முகத்தில் தாடியையும், மீசையையும், அரையில் ஒரு கிழிந்த அண்டையும் உடையவனாயிருக்க வேண்டிய ஒரு நாடக பாத்திரத்தில், ஒரு சிறு பெண், தலையில் நடுவில் வகிடு எடுத்து, மயிரை காதுக்குக் கீழாக கிராப் (crop) செய்து கொண்டது போல் அணிந்து, உடம்பை கணுக்கால் வரையில் வஸ்திரங்களால் மூடி, நடித்ததேயாம். 4) “பெயர் கங்கா பவானி குடிப்பதற்குத் தண்ணீர் இல்லை” என்று ஒரு பழமொழியுண்டு. சில வருடங்களுக்கு முன் ஒரு பிச்சைக்காரக் கிழவி, பிச்சைக்கு அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவாள், அவள் “தாயில்லாத கிழவியம்மா! ஒரு பிச்சை போடம்மா” என்று கூவிக் கொண்டே வருவாள். தாயில்லாத கிழவி என்பதே ஒரு விசேஷம்! குழந்தைகளெல்லாம் “தாயில்லாக் கிழவி வந்திருக்கிறாள், பிச்சை போட வேண்டும்” என்று அவளுக்கு முக்கியமாகப் பிச்சை போடுவார்கள்! ஒரு நாள் அவளுடைய பெயர் என்னவென்று நான் வினவ, “தர்மாம்பாள்” என்று பதில் உரைத்தாள். தர்மாம்பாள் என்பது தர்மசமவர்த்தினி என்னும் அம்மனுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/26&oldid=1352413" இலிருந்து மீள்விக்கப்பட்டது