பக்கம்:Humorous Essays.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஹாஸ்ய வியாசங்கள்

21

பெயராம். தர்ம தேவதையே பிச்சையெடுக்க நேரிட்டது கலிகாலக் கொடுமையால்! பெயரிலாவது கொஞ்சம் பொறுத்த மிருக்கலாகாதா? எனனுடைய நண்பர் ஒருவர் இருந்தார்; அவர் கிறிஸ்தவர், பெயர் மாத்திரம் “சிவ சுப்பிரம்மண்யம்” அந்தப்படி, பிச்சையெடுக்கும் இக்கிழவியின் பெயர் தர்மாம்பாள்! (5) சென்ற வருடம் “வள்ளி மணம்” என்னும் பேசும் படக்காட்சி ஒரு இடத்தில் காட்டப்பட்டது. வள்ளி மணம் என்பது ஒரு சுபமான விஷயத்தைப் பற்றிய கதையென்பதைப் பற்றி இங்கு எழுத வேண்டியதில்லை. அதில் ஆரம்பக் காட்சியில் வள்ளி வேடம் பூண்ட ஸ்திரீ தலை மயிரை விரித்துப் போட்டுக் கொண்டு பிரலாபிக்கிறாள்! நமது நாட்டில் ஸ்திரீகள் தலை மயிரை விரித்துப் போட்டுக் கொண்டு அழுவது, தங்கள் கணவன் இறந்த சமயத்தில்தான் என்பதை நான் தெரிவிக்க வேண்டியதில்லை. ஷேக்ஸ்பியர் மஹாகவியின் நாடகங்களின் முதல் காட்சியில் பின் வரும் முக்கிய விசேஷத்தை முன்னதாகவே குறிக்கிறார் என்பது அவரது நாடகங்களை தற்சமயம் நடிக்கிறவர்களுக்கு நன்றாய்த் தெரியும். இந்த டாக்கியை அமைத்தவர்களுடைய கொள்கை, வள்ளி தேவிக்கு கடைசியில் கலியாணமாகப் போகிறதென்பதை முதல் காட்சியில் அவள் தலைவிரி கோலமாய் அழுவதினால் காட்ட வேண்டுமென்பது போலும். (6) சில வருடங்களுக்கு முன்பு ஒரு சமயம் இங்கிலாந்திலிருந்து வந்த ஒரு சீமானுக்கு நல்வரவாக ஒரு கொண்டாட்டம் நடந்தது. அச்சமயம், அச்சீமானை நடுவில் நிறுத்தி, ஊர்கோலமாக, பார்க்கைச் சுற்றி வர ஆரம்பித்த பொழுது, முதலில் பாண்டு வாத்தியக்காரர்கள் வாசித்துக் கொண்டு போக ஏற்பாடு செய்தனர். ஊர்கோலம் ஆரம்பித்த பொழுது, அதை ஏற்பாடு செய்தவர்கள், ஊர்கோலம் போகும் பொழுது ஏதாவது சவுக்கமாக மார்ச் (March) வாசிக்க வேண்டுமென்று பாண்டு தலைவனுக்குச் சொல்ல, அவன் அப்படியே ஆகட்டுமென்று தலையசைத்து விட்டு, கிறிஸ்தவர்கள் இறந்த பிணத்தை எடுத்துக் கொண்டு போகும் பொழுது மெல்ல வாசிக்கும் டெட் மார்ச் (Dead march) எனனும் பாட்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/27&oldid=1352414" இலிருந்து மீள்விக்கப்பட்டது