பக்கம்:Humorous Essays.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஹாஸ்ய வியாசங்கள்

23

“அரிச்சந்திரா மயான காண்டத்துக்கு ஜெய்” என்று சென்னையில் பல வீதிகளில் தினம் ஜனங்கள் கோஷ்டம் போடுகிறார்கள். இவைகளை யெல்லாம் பலரறியப் பிரசுரம் செய்ய வேண்டுமென்றால் வேறு வகையில்லாமலா போயிற்று? (9) ஒரு முறை சென்னையில் ஒரு வினாயகர் கோயிலில் கும்பாபிஷேகமோ அல்லது ஏதோ ஒரு முக்கியமான உற்சவம் நடந்தது. அன்று உற்சவ தினம் சாயங்காலம் அக்கோயில் தர்மகர்த்தர்கள் அக்கோயிலின் மண்டபத்தில் ஒரு பாகவதரைக் கொண்டு ஒரு கதை ஏற்படுத்தினார்கள். கதை “ராமதாஸ்” சரித்திரம்! எனக்கு சைவ வைஷ்ணவத் துவேஷம் என்பது கொஞ்சமேனும் இல்லை என்பதை எனது நண்பர்கள் அனைவரும் அறிவார்கள். ஆயினும் இங்கு நான் எடுத்துக் கூற வந்ததென்ன வென்றால், வினாயகர் கோயிலில் பகவத் கதை வைத்துக் கொள்ளும் பொழுது சைவபரமாக ஏதாவது கதை வைத்துக் கொள்ளக் கூடாதா? ராமதாஸ் கதையாகிய வைஷ்ணவ சம்பந்தமான கதையைத்தான் பொறுக்கி எடுக்க வேண்டுமா? என்பதுதான். சமயோசிதமாக இந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் தக்க படி ஏற்பாடு செய்ய வேண்டுமென்பதுதான் என் அபிப்பிராயம். இதற்காக நான் நேரிற்கண்ட நாடக சம்பந்தமான ஒரு அசந்தர்ப்பத்தைக் கூறி இவ்வியாசத்தை முடிக்கிறேன். (10) ஒரு முறை விக்டோரியா பப்ளிக் ஹாலில் ஒரு சபையார் வள்ளி மணம் என்னும் நாடகத்தை நடத்தினார்கள். அதில் சுப்பிரமணியர் வயோதிகனாக வேடம் பூண்டு வள்ளியின் மனதைப் பரிசோதிக்கிற காட்சி ஒன்றுண்டு என்பதை இதை வாசிக்கும் எனது நண்பர்கள் அறிவார்கள். அக்காட்சியில் வயோதிகர் புசிப்பதற்காக, வள்ளி தேனும், தினை மாவும் கொண்டு வருகிறாள். காட்சி நடக்கும் இடமோ காடு, வள்ளியோ வேடுவ ஜாதியில் வளர்ந்து வந்த பெண்; கதை நிகழ்காலமோ கிருத யுகம்! அச்சமயத்தில் வள்ளி தேனும் தினைமாவும் கொண்டு வந்த பாத்திரம், 1933 ஆம் வருஷம் சைனா தேசத்தில் செய்யப்பட்ட பீங்கான் கோப்பை இந்த சந்தர்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/29&oldid=1352416" இலிருந்து மீள்விக்கப்பட்டது