பக்கம்:Humorous Essays.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

ஹாஸ்ய வியாசங்கள்

பத்தில் வேறு தக்க பாத்திரம் கிடைக்கா விட்டால், ஒரு இலையிலாவது அதைக் கொண்டு வந்திருக்கலாகாதா எனறு யோசித்தேன்!


அம்கு மாலும் நை சாயபு கதை

நமது சபாபதி முதலியார் ஒரு முறை நிஜாம் ராஜ்யத்தின் பிரதான பட்டணமாகிய ஐதராபாத்துக்குப் போயிருந்தார், தன் வேலையாள் சபாபதியுடன், என்று நான் கூற வேண்டியதில்லை. போன மறு தினம் பட்டணத்தைச் சுற்றிப் பார்க்க வேண்டுமென்று விரும்பி, சபாபதியுடன் அப்பட்டணத்திலுள்ள வேடிக்கை வினோதங்களையெல்லாம் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தார். அப்படி வரும் பொழுது தங்கள் எதிரில் ஒரு வீதியில் பெரிய மாளிகையொன்று புலப்பட்டது. உடனே இவ்வழகிய மாளிகை யாருடையதென்று அறிந்து வரும் பொருட்டு சபாபதியை அதனருகில் அனுப்பினார். அவன் அதற்குள் உக்கா பிடித்துக் கொண்டிருந்த சாயபு ஒருவரைப் பார்த்து, தமிழில், இது யாருடையது என்று கேட்க, அப்பாஷையறியாத அந்த சாயபு சும்மா இருந்தான். பிறகு தன் பாஷை அவனுக்குத் தெரியாதென்று அறிந்தவனாய், சபாபதி சைகையால் கட்டிடத்தைக் காட்டி யாருடையதென்று கேட்டுப் பார்த்தான். அதற்கு அந்த உக்கா சாயபு “அம்கு மாலும் நை சாயபு” என்று பதில் உரைத்தார். உடனே சபாபதி அப்பதிலைக் கேட்டுப் பாடம் செய்து கொண்டு வந்து, சபாபதி முதலியாரிடம் “இந்த மாளிகை அம்கு மாலும் நை சாயபுடையதாம்” என்று தெரிவித்தான். இந்துஸ்தானியில் ஒரு பதமும் அறியாத நமது முதலியார் சரிதான் என்று ஒப்புக் கொண்டு கொஞ்ச தூரம் போனார். அங்கு முன்பு பார்த்ததை விட இன்னும் அழகிய மாளிகை ஒன்று தென்பட்டது. யாருடையது என்று விசாரித்து வர, சபாபதியை அனுப்பினார். முன்பு போல் சபாபதி அங்கு போய்க் கொண்டிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/30&oldid=1352417" இலிருந்து மீள்விக்கப்பட்டது