பக்கம்:Humorous Essays.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஹாஸ்ய வியாசங்கள்

27

எதிரில் வைக்க, சுந்தர ஐயர், தன் வழக்கப்படி, பஞ்ச பாத்திரத்தினின்றும் உத்தரணியால் ஜலத்தையெடுத்து பணத்தின் மீது புரோட்சித்து, பிறகு அதைத் தட்டிப் பார்த்து எடுத்துக் கொண்டு, தன் பையில் சேர்த்துக் கொண்டு, சபாபதி முதலியார் வேண்டிய புஸ்தகத்தை அவர் கையில் கொடுக்க முயல, சபாபதி முதலியார் சுந்தர ஐயரை அப்புஸ்தகத்தை தரை மீது வைக்கும்படி சொன்னார். சுந்தர ஐயரும் அப்படியே புஸ்தகத்தைத் தரை மீது வைக்க, சபாபதி முதலியார், தன் பின்புறமாக ஒளித்து வைத்திருந்த வெள்ளிப் பாத்திரத்தை எடுத்து, அதிலிருந்த குழாய் ஜலத்தை அபபுத்தகத்தின் மீது கொட்டி சுத்தம் செய்ய ஆரம்பித்தார்! அதன் மீது சுந்தர ஐயர், “ஏன் இப்படிப் புஸ்தகத்தின் மீது ஜலம் கொட்டிக் கெடுக்கிறீர்?” என்று கேட்க, சபாபதி முதலியார் “வேறொன்றுமில்லை, நான் தொட்ட பணத்தை நீங்கள் ஜலத்தினால் சுத்தம் செய்து தீண்டிய பிரகாரம், நீங்கள் தொட்ட புஸ்தகத்தை நான் ஜலத்தினால் சுத்தி செய்து எடுத்துக் கொள்ளுகிறேன்!” என்று பதில் உரைத்தார்.

அது முதல் சுந்தர ஐயர் மேற்சொன்ன தீண்டா விரதத்தை விட்டொழித்தனர் என்று கேள்வி.

சகுனம் பார்த்த கதை

சென்னையில் கதிர்வேலு முதலியார் என்று ஒரு முதலியார் இருந்தார். அவர் சகுனங்களையெல்லாம் கவனிப்பதில் மிகவும் ஈடுபட்டவர்; வீட்டை விட்டு புறப்படும் பொழுது யாராவது தும்மினாலும் சரி, இருமினாலும்சரி, மழை தூறினாலும் சரி, பூனை குறுக்கே வந்தாலும் சரி, அன்று புறப்படவே மாட்டார். அப்படிப்பட்டவர் இருந்த வீட்டில் தெய்வ கதியால் தனிஷ்டா பஞ்சமியன்று ஒரு சாவு நேர்ந்தது. அதன் பேரில் புரோகிதர்கள் கூறிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/33&oldid=1352450" இலிருந்து மீள்விக்கப்பட்டது