பக்கம்:Humorous Essays.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஹாஸ்ய வியாசங்கள்

29

வேலு முதலியார் தன் சம்சாரத்துடன் இவ்வீட்டிற்கு லக்னமெல்லாம் பார்த்துக் கொண்டு வந்து சேர்ந்தார். வந்தவுடன் தான் முன்பு ஏற்பாடு செய்தபடி, கதவைத் தட்ட, முதலில் உள் இருந்து பதில் ஒன்றும் வரவில்லை. பிறகு பலமாய்த் தட்ட உள்ளிருந்தவள் யார் அது? என்று ஒரு குரல் வந்தது. இதேது புதிய குரலாய் இருக்கிறதென சந்தேகித்தவராய், கதிர்வேலு முதலியார் உள்ளே இருக்கிறது யாரம்மா? என்று கேட்டார். கொஞ்ச நேரம் பதில் வரவில்லை. அதன் பேரில் உரத்த சப்தமாய் “யார் அது? லட்சுமியா?“ என்று கேட்க, - உள்ளிருந்து “அல்ல“ என்று பதில் வந்தது, அதன் பேரில் கொஞ்சம் கோபம் கொண்டவராய் “பிறகு யார் அது உள்ளேயிருப்பது” என்று கேட்க, உள்ளிருந்தவள், “லட்சுமியின் அக்காள்!” என்று உரக்க பதில் உரைத்தாள். லட்சுமி தேவியாகிய ஸ்ரீதேவியின் அக்காள் யாரென்று நான் இதை வாசிக்கும் நண்பர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியதில்லை. பிறகு கதிர்வேலு முதலியார் தன் கோபத்தையும் துக்கத்தையும் அடக்கிக் கொண்டு, கதவைத் திறக்கச் சொல்லி உள்ளே நுழைந்து, யார் இந்த புது பெண்பிள்ளையென்று கவனிக்கும் பொழுது, அமங்கிலி எதிர்பட்டாள். அது முதல் “இனிமேல் சகுனம் பார்ப்பதில்லை” யென்று கதிர்வேலு முதலியார் தீர்மானித்ததாகக் கேள்விப் பட்டேன்.


“வயது”

எனது இளைய நண்பர்கள் வயதைப் பற்றி என்ன வேடிக்கையாய் எழுதக் கூடும் என்று எண்ணலாம், அப்படி எண்ணுபவர்களெல்லாம் இந்த சிறு வியாசத்தை முழுவதும் படித்து விட்டு, பிறகு தீர்மானிக்கும்படி வேண்டிக் கொள்ளுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/35&oldid=1352456" இலிருந்து மீள்விக்கப்பட்டது