பக்கம்:Humorous Essays.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஹாஸ்ய வியாசங்கள்

33

டைய வயதைக் குறைத்து விடுகிறது. அன்றியும் சாதாரணமாக துரைத்தனத்தில் உத்தியோகம் அபேட்சிப்பவர்களெல்லாம், பிறகு ஐம்பத்தைந்தாவது வயதில் பென்ஷன் வாங்கிக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தப் படாமலிருக்க, முதலில் அப்ளிகேஷன் போடும் பொழுதே இரண்டு மூன்று வருடங்கள் குறைத்து எழுதி, அஸ்திவாரம் போட்டு வைத்துக் கொள்ளுகிறார்கள்.

ஆனால் இது சில சமயங்களில் கஷ்டத்திற்குள்ளாக்குகிறது. அதற்கு ஒரு உதாரணத்தை எடுத்துக் கூறுகிறேன். எனக்குத் தெரிந்த அண்ணன் தம்பிகள் இருவர் இருந்தனர். மூத்தவர் கவர்ன்மென்ட் உத்தியோகத்திலிருந்தார்; அதைச் சேரும் பொழுதே தன் வயதை மூன்று வருடம குறைத்து எழுதி வைத்தார்; அவர் தம்பி அவருக்கு இரண்டு வருடம் இளையவர். தம்பிக்கு ஷஷ்டி பூர்த்தி வந்த பொழுது, மூத்தவருக்கு கவர்ன்மென்ட் ரிகார்டுகளின்படி 58 வயதுதான் ஆகியது! தம்பிக்கு ஷஷ்டி பூர்த்தி பஹிரங்கமாய் நடத்தினால் அண்ணன் வயதைக் குறைத்தெழுதிய சமாசாரம் வெளியாகி விடும். ஆகவே அண்ணன் தம்பியிடம் வந்து தம்பிக்குப் பகிரங்கமாய் ஷஷ்டி பூர்த்தி செய்ய வேண்டாமென்று வேண்டிக் கொண்டார்!

இச்சந்தர்ப்பத்தில் இந்தியாவின் மேல் மாகாணங்கள் ஒன்றில் உண்மையாய் நடந்த கதை எனக்கு ஞாபகம் வருகிறது. அங்கு ஒரு மகம்மதியர்-வக்கீலாயிருந்தவர்-தனது நாற்பத்தைந்தாவது வயதில், மாஜிஸ்டிரேட்டாக ஏற்படுத்தப்பட்டார். அப்பொழுது தன்னுடைய வயதில் 5-வருடம் குறைத்து 40-வயது என்று எழுதி வைத்து விட்டார். பிறகு அவருக்கு அந்த உத்தியோகம் கிடைத்ததற்காக அவருடைய அத்யந்த நண்பர்களில் சிலர் அவருக்கு ஒரு விருந்து அளித்தனர். அந்த விருந்தான உடன், ஏதோ பேச்சில் அவருடைய வயதைப் பற்றி பேச்சு வர தன் உண்மையான வயதை மறைத்து, ஐந்து வயது குறைத்து சொல்ல வேண்டியதாயிற்று. அதன்படி, அங்கிருந்த அவரை குழந்தைப் பருவ முதல் அறிந்த அவரது நண்பர் ஒருவர் கணக்கிட்டுப் பார்த்தார்; இவர் வக்கீலாக இருபது வருடம் வேலை பார்த்தார்-அதற்கு முன்பு ஒரு வருடம் அப்ரெண்டிசாக இருந்தார்-அதற்கு முன்பு லா காலேஜில் இரண்டு
5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/39&oldid=1352498" இலிருந்து மீள்விக்கப்பட்டது