பக்கம்:Humorous Essays.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஹாஸ்ய வியாசங்கள்

35

நம்முடைய தேசத்திலும் ஸ்திரீகளுக்கு மறு விவாஹம் சாதாரணமாயுண்டாகி விட்டால் நம்முடைய ஸ்திரீகளுக்கும் வயதைப் பற்றி குறைத்துக் கூற வேண்டிய கஷ்டம் உண்டாகி விடும்!

மேல் நாட்டு புத்திமான் ஒருவர் அங்குள்ளவர்கள் எல்லாம் இளமையில் தாங்கள் இருப்பதை விட அதிக வயதானவர்கள் போல் காட்டிக் கொள்ளுகிறார்கள், முதுமையில் குறைந்த வயதுடையவர்களைப் போல் காட்டிக் கொள்ளுகிறார்கள் என்று எழுதி யிருக்கிறார்.

வயதைப் பற்றி நான் அறிந்த இரண்டு மூன்று கதைகளைக் கூறி இந்த வியாசத்தை முடிக்கிறேன்.

கிறிஸ்தவ கலாசாலையில் சுமார் 50 வருடங்களுக்கு முன் சின்னசாமி பிள்ளை என்று ஒரு தமிழ் உபாத்தியாயர் இருந்தார். அவருக்கு 65 வயதுக்கு மேல் இருக்கும் அவர் ஒரு நாள் திங்கட்கிழமை “கருக்காக, முகக்ஷவரம் செய்து கொண்டு” பள்ளிக்கூடத்திற்கு வந்தார். அச்சமயம் அவரை டாக்டர் மில்லர் சந்தித்து, ஆங்கிலத்தில் “சின்னசாமி மிகவும் சந்தோஷம்! உனக்கு வரவர வயது குறைந்து கொண்டு வருகிறது, நல்ல யெளவனமுள்ளவனாகக் காண்கிறாய்!” என்று வேடிக்கையாய்ச் சொல்ல “துரையவாள், எல்லாம் அம்பட்டனுடைய அனுக்கிரஹம்” என்று பதில் உரைத்தார்.

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பாக அகௌண்டென்ட் ஜெனரல் (Accountant-general) ஆபீஸிற்கு டப் (Tupp) என்கிற புதிய பிரதம உத்யோகஸ்தர் வந்தார். வந்ததும் தனது ஆபீசிலுள்ளவர்களையெல்லாம் பார்க்க வேண்டுமென்று சுற்றி வரும் பொழுது, அநேகம் வயோதிக குமாஸ்தாக்கள் தலையில் பாகையைப் போட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார். இதென்ன இது என்று தன்னுடன் வந்த சூப்பரின்டென்டைக் கேட்ட பொழுது அவர், “இத்தேசத்தில் வயதானவர்களெல்லாம் இந்தப் பாகையைத்தான் தலையில் போட்டுக் கொள்வது” என்று பதில் உரைத்தார். ஆபீசையெல்லாம் சுற்றிப் பார்த்து வந்தவுடன் தன் சூபரின்டென்டிடம், “என்ன நம்முடைய ஆபீசில் அநேகம் பெயர் மிகவும் வயதானவர்கள் இருக்கிறார் போலிருக்கிறது” என்று கூறினார்; இந்த சமாசாரம் சாயங்காலத்திற்குள்ளாக அங்குள்ள வயது சென்ற குமாஸ்தாக்களுக்கெல்லாம் எட்டி விடவே, மறுநாள் 11-மணிக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/41&oldid=1352528" இலிருந்து மீள்விக்கப்பட்டது