பக்கம்:Humorous Essays.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஹாஸ்ய வியாசங்கள்

37

படி 90 வயதுக்கு மேலிருக்கும். இவ்வளவு வயதாகியும் நல்ல தேகஸ்திதியிலிருக்கிறாரே, என்று சந்தோஷப்பட்டவனாய், “தங்களுக்கு என்ன வயதாகிறது?” என்று கேட்டேன். அவர் அதைக் கூறாது மயங்க, நான் “இனிமேல் உங்கள் வயதைச் சொல்ல என்ன தடையிருக்கப் போகிறது? ” என்று வினவ, அவர் “வேறொன்றுமில்லை, சாஸ்திரங்களில் ‘ஒருவனுடைய பொருள், ஒருவனுடைய வயது, ஒருவனுடைய ஆசாரியார் பெயர், இன்னும் இரண்டொரு விஷயங்களை, வெளியில் கூறக் கூடாது’ என்று எழுதியிருக்கிறது” என்று கூறி, ஒரு சம்ஸ்கிருத சுலோகத்தை எடுத்துக் கூறினார். அப்பொழுது, நமது முன்னோர்கள், இனி வரப் போகிற கஷ்ட நிவர்த்திக்காக, முன்பே ஸ்லோகங்களைச் செய்திருக்கிறார்களே, என்று சந்தோஷப்பட்டேன்! ஆயினும் ஒரு தப்பிதம் செய்தேன்; அந்த ஸ்லோகத்தை முற்றிலும் கேட்டு, பாடம் செய்து கொள்ள மறந்தேன். அதைக் குருட்டுப் பாடம் செய்திருப்பேனாயின் தற்காலம் தங்கள் வயதைக் குறைத்து கூற விரும்பும் டாக்கி ஆக்டர்களுக்கும் ஆக்ட்ரெஸ்களுக்கும் உபதேசித்திருக்கக் கூடுமல்லவா?


ஓர் பிரசங்கம்

துரப்பாக்கத்து தமிழ் சங்கத்தின் திறப்பு விழாவில் சபாபதி முதலியார் அவர்கள் செய்த பிரசங்கம்:-

“கனவான்களே சபையோர்களே ! உங்கள் சபை காரியதரிசியானவர், இன்றைத் தினம் என்னைத் தமிழில் ஓர் பிரசங்கம் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். தமிழ் பாஷையின் மீது எனக்குள்ள ஆர்வத்தினால் அதற்கு இசைந்தேன். பிரசங்கம் அதிகமாகயிருக்க வேண்டாம் சுருக்கமாயிருந்தால் போதும் என்று அவர் சொன்னபடியால், “ஆத்திச்சூடியிலுள்ள அரும்பொருள்கள்” என்கிற விஷயத்தைப் பற்றிப் பேசலாமென்று தீர்மானித்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/43&oldid=1352531" இலிருந்து மீள்விக்கப்பட்டது