பக்கம்:Humorous Essays.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


ஹாஸ்ய வியாசங்கள்

சென்னை விநோதங்கள்


சென்ன பட்டணம் இந்தியாவில் மிகவும் குறைந்த நாகரீகமுடைய நகரமென்று, கல்கத்தா பம்பாயிலுள்ள ஜனங்கள் ஏளனம் செய்கிறதாகக் கேள்விப்பட்டேன். இவ்விழிசொல் ஏற்றதா, இல்லையா, என்று பார்க்கும் பொருட்டுச் சென்னையிலுள்ள அநேக இடங்களைச் சுற்றிப் பார்த்து வந்தேன். முடிவில், “அவ்விழி சொல் சென்னைக்கு ஏற்றதல்ல; சென்னையிலுள்ள சில விஷயங்கள் கல்கத்தா, பம்பாய் முதலிய இடங்களில் இல்லை” என்கிற தீர்மானத்திற்கு வந்தேன். அவைகளில் சிலவற்றைப் பற்றி அடியில் எழுதுகிறேன்.

சென்னையில் பீபில்ஸ் பார்க்கில் ஒரு பக்கம் “ராயல் பாத்” என்கிற பெயரையுடைய ஒரு கட்டிடமுண்டு. அது 1922-ம் வருஷம் ஒரு சீமானுடைய நன்கொடையால் கட்டப்பட்டதாம். அது சென்னைவாசிகள் நீந்திக் குளிக்கும்படியாகக் கட்டப்பட்டது. இதில் விசேஷமென்னவென்றால் ஜனங்கள் நீந்திக் குளிப்பதற்காக எல்லா செளகரியங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன; குளித்தவுடன் உடம்பை உலர்த்திக் கொள்வதற்காகவும், ஆடை அணிவதற்காகவும் அறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன; நீந்தக் கற்போர்களுக்கு அபாயமில்லாதபடி ஒரு பக்கம் கொஞ்சம் ஆழமில்லாமலும், போகப் போக ஆழம் அதிகமாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது; ஆனால் ஒன்றுதான் குறைவாயிருக்கிறது.-இந்தக் குளிக்கும் இடத்தில் தண்ணீர்தான் கிடையாது! பம்பாய், கல்கத்தா முதலிய பட்டணங்களைப் பற்றிப் புகழ்ந்து பேசும் ஜனங்களில் யாராவது அவ்விடங்களில் தண்ணீரில்லாத குளிக்குமிடங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/5&oldid=1352331" இலிருந்து மீள்விக்கப்பட்டது